ஈராண்டுக்குப் பின் இந்தியாவில் மீண்டும் உலக விமானச்சேவை

ஈராண்டுக்குப் பின் இந்தியாவில் மீண்டும் உலக விமானச்சேவை

1 mins read

இந்­தி­யா­வில் கொவிட்-19 கார­ண­மாக ஈராண்டு காலம் முடங்கி இருந்த அனைத்­து­லக விமா­னச் சேவை நேற்று மீண்­டும் தொடங்­கின. உலக சேவை­க­ளைத் தொடங்க ஏது­வாக விமான நிறு­வ­னங்­களும் விமான நிலை­யங்­களும் ஆயத்­த­மா­யின.

கொரோனா தொற்று கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட இந்­திய சுற்­று­லாத் துறை கொஞ்­சம் கொஞ்­ச­மாக வழக்­க­நி­லைக்­குத் திரும்பி வரு­கிறது.

இந்­தக் கோடை­யில் 40 நாடு­களைச் சேர்ந்த 60 விமான நிறு­வனங்­கள் இந்­தி­யா­விற்­கும் இந்தி­யா­வில் இருந்­தும் 1,783 சேவை­களை நடத்த அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து தலைமை இயக்கு னர் அலுவலகம் தெரி­வித்­தது.

அந்தச் சேவை­களை அந்நிறு வனங்கள் மார்ச் 27 முதல் அக்­டோ­பர் 29ஆம் தேதி வரை வழங்­கும். இந்­தி­யா­வைச் சேர்ந்த ஆறு விமான நிறு­வ­னங்­கள் வாரம் ஒன்­றுக்கு மொத்­தம் 1,466 அனைத்­து­லக சேவை­களை நடத்த அங்­கீ­கா­ரம் கொடுக்­கப்­பட்டு இருக்­கிறது.