உருமாறும் மனநலக் கழகம்: புதுப்பொலிவு பெறும் வார்டுகள்; ஒருமித்த கவனமும் மாறுகிறது

உருமாறும் மனநலக் கழகம்: புதுப்பொலிவு பெறும் வார்டுகள்; ஒருமித்த கவனமும் மாறுகிறது

2 mins read
cc464d54-1ff1-4bee-8d7f-9caef21566c3
-

மன­ந­லக் கழ­கம் திருத்தி அமைக்­கப்­ப­டு­கிறது. அங்கு இருக்­கும் சில பழைய வார்­டு­கள் புதுப்­பொ­லி­வைப் பெறு­கின்­றன. அதோடு மட்டுமின்றி, அந்­தக் கழ­கத்­தின் ஒருமித்த கவ­ன­மும் மாற்­றம் காண்கிறது.

மன­நல பாதிப்­பில் இருந்து மக்­களைக் காக்க வேண்­டும் என்­பது இப்­போது இந்­தக் கழ­கத்­தின் இலக்காக இருக்­கிறது.

இதை­யொட்டி கழ­கத்­தில் உரு­மாற்­றம் இடம்­பெ­று­கிறது. மன­ந­லப் பரா­ம­ரிப்பு என்­பது நீண்ட நெடுங்­கா­ல­மா­க மனச்சங்­க­ட­மான ஒன்­றா­கவே பார்க்கப்பட்டு வந்துள்ளது.

இந்த எண்­ணத்­தில் இப்­போது மாற்­றம் இடம்­பெ­று­கிறது என்­ப­தற்கு அறி­கு­றி­யாக இந்­தக் கழ­கத்­தில் உரு­மாற்­றம் அமலாகிறது.

அதோடு மட்­டு­மின்றி, சுகா­தாரப் பரா­ம­ரிப்­பைப் பொறுத்­த­வ­ரை­யில் சிங்­கப்­பூர் புதிய அணு­கு­மு­றை­யை­இப்­போது கைக்­கொண்டு வரு­கிறது. இதைப் பிரதிபலிக்கும் வகை யிலும் இந்த மாற்றம் இருக்கும்.

அதா­வது மக்­கள் நோய்­வாய்­ப் படும்போது அவர்­க­ளுக்குச் சிகிச்சை அளிக்­கும் முறைக்­குப் பதி­லாக மக்­களை உடல்­ந­லத்­து­டன் வைத்­தி­ருக்க வேண்­டும் என்­பது இந்­தப் புதிய அணு­கு­மு­றை­யின் இலக்­காக இருக்­கிறது.

சுகா­தார அமைச்சு, மன­நல பணிக்­குழு ஒன்றை 2020 அக்­டோபரில் அமைத்­தது. கொவிட்-19 கார­ண­மாக வாழ்­வில் ஏற்­ப­டக்­கூடிய பாதிப்­பு­களை மக்­கள் சமா­ளிக்க உத­வும் வகை­யில் அந்­தப் பணிக்­குழு அமைக்­கப்­பட்­டது.

பிறகு பல அமைப்­பு­க­ளை­யும் உள்­ள­டக்­கிய சிறப்­புப் பணிக்­குழு ஒன்று சென்ற ஆண்டு ஆகஸ்ட்டில் அமைக்­கப்­பட்­டது.

கொவிட்-19க்குப் பிற­கும் மக்­களின் மன­ந­லனைக் கட்­டிக்­காப்­ப­தற்­குச் சிங்­கப்­பூர் எடுக்­கும் முயற்சி­க­ளுக்கு வழி­காட்­டு­வ­தற்­காக இந்­தக் குழு அமைந்­தது.

அனேக­மாக இந்­தக் குழுவே நிரந்­தர அமைப்­பாக இருக்­கும் என்ற வாய்ப்­பும் இருக்­கிறது.

மன­நலக் கழ­கத்­தில் 49க்கும் மேற்­பட்ட வார்­டு­களில் ஏறத்­தாழ 2,000 படுக்­கை­கள் உள்­ளன. அவற்றில் முற்­றிய மன­ நோ­யா­ளி­களுக்­கான வார்­டு­கள் 10 உள்ளன.

இவை 1993ல் உரு­வாக்­கப்­பட்­ட­தைப் போலவே இன்­ன­மும் இருக்­கின்­றன. இப்­போது இவற்­றுக்­குப் புதுப்­பொ­லிவு கொடுக்­கப்­படும்.

இந்­தப் புதுப்­பொ­லி­வுத் திட்­டம் இந்­தக் கழ­கத்­தில் இது­வரை இல்­லாத அள­வுக்கு ஆகப்பெரிய அள­வில் இடம்­பெ­று­கிறது என்று கழகத்­தின் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யான இணைப் பேரா­சி­ரி­யர் டேனி­யல் ஃபங், 56, குறிப்­பிட்­டார்.

"கழ­கம் தன் நோயா­ளி­க­ளைப் பொறுத்­த­வரை மீட்சி, நம்­பிக்கை, சுய­மா­கச் செயல்­ப­டு­தல் என்ற மூன்று அம்­சங்­களில் ஒரு­மித்த கவ­னத்­தைச் செலுத்­து­கிறது.

"கழ­கத்­தில் இடம்­பெ­றும் புதுப்­பொ­லி­வுத் திட்­டம் இந்த மூன்று கவ­னங்­களையும் வலி­யு­றுத்­து­வ­தா­க­ இருக்­கிறது," என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

"இது­வ­ரை­, கழ­கம் பெரும்­பாலும் நல்ல நோய் பரா­ம­ரிப்­பி­லேயே தன்­னு­டைய ஒரு­மித்த கவ­னத்­தைச் செலுத்தி வந்­தது.

"இனி­மேல் மக்­க­ளின் மன­ந­லன் மேம்­பட உத­வு­வ­தில் இது தனது கவ­னத்­தைச் செலுத்­தும்," என்று பேரா­சி­ரி­யர் ஃபங் குறிப்­பிட்­டார்.

மன­நலப் புரிந்­து­ணர்வு சமூக அளவில் மனச்சங்­க­டத்­தைக் குறைக்­கும். அதே­வே­ளை­யில், மன­ந­லப் பிரச்­சி­னை­க­ளைப் பற்றி ஆழ­மா­கப் புரிந்­து­கொண்டு அத்­த­கைய பிரச்­சி­னை­கள் ஏற்­பட்­டால் அவற்­றைச் சமா­ளிக்க என்ன செய்­ய­லாம் என்­பதைத் தெரிந்­து­கொண்­டால் சுய மனச்­சங்­க­டத்­தைப் போக்­கி­வி­ட­லாம் என்று பேரா­சி­ரி­யர் ஃபங் கூறினார்.