மாதர் மேம்பாட்டுக்கான வெள்ளை அறிக்கை பாலின சமத்துவம் பேணும் சமுதாயத்துக்கான 25 செயல்திட்டங்கள்; 10 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படும்

மாதர் மேம்பாட்டுக்கான வெள்ளை அறிக்கை பாலின சமத்துவம் பேணும் சமுதாயத்துக்கான 25 செயல்திட்டங்கள்; 10 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படும்

3 mins read

பணி­யி­டங்­க­ளி­லும் வீட்­டி­லும் ஆண்­க­ளுக்­கும் பெண்­க­ளுக்­கும் "நியா­ய­மான, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய சம­நிலை சமு­தா­யத்தை" உரு­வாக்­கும் இலக்­கை­யொட்டி பெண்­கள் மேம்­பாட்­டுக்­கான வெள்ளை அறிக்­கையை அர­சாங்­கம் தயா­ரித்­துள்­ளது. அடுத்த பத்­தாண்­டு­க­ளுக்­கான 25 செயல்­திட்­டங்­க­ளைக் கொண்ட சிங்­கப்­பூர் பெண்­கள் மேம்­பாடு குறித்த வெள்ளை அறிக்கை நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பா­டு­களுக்கு அதிக ஆத­ரவு, பரா­ம­ரிப்­பா­ளர்­களுக்கு கூடு­தல் உதவி, வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளின்­போது விரைந்து நட வடிக்கை போன்­ற­வற்­று­டன், இனி அதி­க­மான பெண்­கள் தங்­கள் கருமுட்­டை­களை உறைய வைக்க அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

ஓராண்­டுக்­கும் மேலான விவா­தங்­களுக்­குப் பிறகு உரு­வாக்­கப்­பட்­டுள்ள இந்த அறிக்கை, அனைத்து குடி­மக்­களும் தங்­கள் முழுத் திற­னை­யும் வெளிக்­கொ­ண­ரக்­கூ­டிய சமூ­கத்தை உறுதி செய்­வதை நோக்­க­மா­கக்­கொண்­டது.

பதவி உயர்வு பெற பணி­யி­டத்­தில் உள்ள தடை­கள் முதல், வீட்­டில் பராமரிப்புப் பொறுப்­பு­கள், இணைய வன்­முறை, தாக்கு தல் வரை இன்­ன­மும் பெண்­க­ளுக்கு உள்ள தடை­க­ளை­யும் சவால்­க­ளை­யும் விவ­ரிப்பது­டன், இவற்­றுக்­குத் தீர்­வு­காண அர­சாங்­கம் முழு முயற்சி எடுக்­கும் என்­பதையும் அறிக்கை உறு­தி­ய­ளிக்­கிறது.

"பெண்­க­ளுக்கு இன்­னும் பல வழிகளில் ஆத­ரவு தேவை என்­பதையும் விழிப்புணர்வு தேவை என்பதையும் உணர்த்­து­கிறது," என்று அறிக்கை குறித்து இம்­மா­தத் தொடக்­கத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய தொடர்பு தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ கூறி­னார்.

"நம் வாழ்க்­கை­யில் சந்­திக்­கும் பெண்­கள் தங்­க­ளின் விருப்­பங்­களை நிறை­வேற்­று­வ­தற்­குத் தேவை­யான ஆத­ரவை வழங்­கு­வது நம் ஒவ்­வொ­ரு­வ­ரின் பொறுப்­பா­கும்," என்­றார் அவர்.

தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரும் கொள்கை, சட்ட மாற்­றங்­கள் பெண்­களின் வளர்ச்­சிப் பாதை­யில் உள்ள பல வெளிப்­படை­யான தடை­களை நீக்­கி­விட்­டா­லும், ஒட்­டு­மொத்த சமூ­க­மும் மனப்­போக்கை மாற்ற முயற்­சித்­தால் மட்­டுமே மேலும் வெற்றி கிட்டும் என்கிறது அறிக்கை.

கரு­முட்­டையை உறைய வைக்­கும் திட்­டம் ஓர் எடுத்­துக்­காட்டு என்ற திரு­மதி டியோ, முன்­னர் சமூ­கம் இது­கு­றித்து ஆராய ஆர்­வம் காட்­ட­வில்லை என்­றார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அடுத்த ஆண்­டி­லி­ருந்து 21 முதல் 35 வய­துக்­குட்­பட்ட பெண்­கள் தங்­கள் கரு­முட்­டையை உறைய வைக்க அனு­ம­திக்­கப்­ப­டு­வர். திரு­மண நிலை தகுதி கருத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­படமாட்­டாது.

கரு­வு­று­த­லைப் பாதிக்­கக்­கூ­டிய மருத்­து­வப் பிரச்­சி­னை­கள் உள்ள பெண்­கள் மட்­டுமே அவ்­வாறு செய்ய அனு­ம­திக்க வேண்­டும் என்ற நீண்­ட­கா­லக் கொள்­கை மாற்­றி­ய­மைக்­கப்­ப­டு­கிறது.

இந்த 115 பக்க வெள்ளை அறிக்கை ஐந்து முக்­கிய பிரி­வு­களில் கவ­னம் செலுத்து ­கிறது. பணி­யி­டத்­தில் சம வாய்ப்­பு­கள்; பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளுக்­கான அங்­கீ­கா­ர­மும் ஆத­ர­வும்; வன்­முறை, பாதிப்­புக்கு எதிரான பாது­காப்பு; ஒற்­றைத் தாய்­மார், மண­விலக்கு பெற்­ற­வர்­ உள்­பட பெண்க­ளுக்­கான பிற ஆத­ரவு நட­வ­டிக்­கை­கள்; மனப்­போக்கு மாற்­றங்­கள் ஆகி­யவை அவை.

சமு­தாய, குடும்ப மேம்­பாடு மற்­றும் கல்­வித் துணை அமைச்­சர் சன் ஷுவெலிங், கலா­சா­ர, சமூ­கம் இளை­யர் துறை மற்றும் வர்த்­தக தொழில் துணை­ய­மைச்­சர் லோ யென் லிங், சுகா­தா­ரம் மற்­றும் தக­வல் தொடர்பு அமைச்­சு­க­ளுக்கான நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் ரஹாயு மஹ்­ஸாம் ஆகி­யோ­ரின் தலை­மை­யில் ஓராண்டு கால தொடர் உரை­யா­டல்­கள் மூலம் திரட்­டப்­பட்ட கருத்­து­களில் இருந்து தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டவை இவை.

இந்த ஐந்து முக்­கிய பிரி­வு­க­ளின் கீழ் 25 செயல் திட்­டங்­கள் உரு­வாக்­கப்­பட்டு உள்­ளன. அவற்­றில் சில 2020ஆம் ஆண்டு செப்­டம்­ப­ரில் இந்த வெள்ளை அறிக்கை முதன்­மு­த­லில் வெளி­யி­டப்­பட்­ட­போது அறி­விக்­கப்­பட்­டன.

பணி­ய­மர்த்­தல், பதவி உயர்வு, ஆட்­கு­றைப்பு போன்­ற­வற்­றில் நியா­ய­மற்ற நடை­ மு­றை­க­ளைக்­ கொண்ட சில முத­லாளி ­கள் மீது நட­வ­டிக்கை எடுக்க புதிய பணி­யிட பாகு­பாடு எதிர்ப்­புச் சட்­டங்­களும் செயல்­ப­டுத்­தப்­பட உள்­ளன. புகார் அளிக்­க முன்­வரும் பெண்­கள் பழி­வாங்­க­லுக்கு உட்­ப­டு­வ­தைத் தடுக்­கும் வகை­யில், இந்தச் ­சட்­டம் ரகசியத்தன்மையைப் பேணும்.

செயல்­திட்­டங்­கள் திறம்­பட செயல்­ப­ட­வும், பெண்­கள் வளர்ச்­சி­யில் சிங்­கப்­பூர் அடுத்த கட்ட முன்­னேற்­றத்தை அடை­ய­வும் மனப்­போக்கு மாற வேண்­டும் என்று வெள்ளை அறிக்கை குறிப்­பிட்­டது.

பாலர்பள்­ளிக் குழந்­தை­க­ளுக்கு உடல் பாது­காப்பு விழிப்­பு­ணர்­வைக் கற்­பிப்­ப­தில் தொடங்கி, உயர்­கல்வி நிறு­வ­னங்­களில் மாண­வர்­க­ளுக்கு மரி­யாதை, தகுந்த நடத்தை பற்­றிய கட்­டாய பாடத்­திட்­டங்­களை வழங்­கு­வதுவரை கல்­வியே இதை அடை­வ­தற்­கான வழி என்று அறிக்கை பரிந்­து­ரைக்­கிறது. இவை அனைத்­தி­லும் ஆண்­க­ளின் பங்கு உள்­ளது என்­ப­தை­யும் வெள்ளை அறிக்கை சுட்­டி­யுள்­ளது.

இதற்காக இடம்பெற்ற 160 உரை­யாடல்­களில் பங்­கேற்­ற 6,000 சிங்­கப்­பூ­ரர்­களில் ஐந்­தில் ஒரு பங்­கி­னர் ஆண்கள்.

பாலின சமத்­து­வத்தை அடை­வ­தற்கு ஒட்­டு­மொத்த சமூ­க­த்தின் முயற்சி தேவை என்று குறிப்­பிட்ட அறிக்கை, சமூ­கம், தனி­யார் அமைப்­பு­கள், குடி­மக்­களை அர­சாங்­கத்­து­டன் இணைந்து பணி­யாற்ற அழைப்பு விடுத்­துள்­ளது.