நடுநிலை நாடாக விளங்க உக்ரேன் விருப்பம்

நடுநிலை நாடாக விளங்க உக்ரேன் விருப்பம்

1 mins read
4db32c87-fd3f-40d1-be49-12bb4e1cf2da
ரஷ்யத் தாக்குதலில் சிதைந்துபோன தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் எதிரே கலங்கி நிற்கும் வாலண்டினா டெமுரா, 70. மரியபோலில் உள்ள இவரது குடியிருப்பு நேற்று முன்தினம் தாக்குதலுக்கு உள்ளானது. படம்: ராய்ட்டர்ஸ் -

உக்­ரே­னும் ரஷ்­யா­வும் துருக்­கி­யில் மீண்­டும் அமை­திப் பேச்சு வார்த்­தையை நேற்­றுத் தொடங்­கின.

முன்­ன­தாக, ரஷ்­யா­வின் கோரிக்­கைக்கு ஏற்ப, நடு­நிலை நாடாக செயல்­ப­டு­வது குறித்து விவா­திக்­கத் தயா­ராக இருப்­ப­தாக உக்­ரேன் அதி­பர் ஸெலன்ஸ்கி கூறி­யுள்­ளார்.

இரு நாடு­க­ளுக்­கி­டை­யே­யான உணர்ச்­சி­பூர்­வ­மான அம்­சங்­களில் விட்­டுக்­கொ­டுத்து அமை­தியை நாட விரும்­பு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டார். பேச்­சு­வார்த்தை உக்­ரே­னின் வட்­டார ஒரு­மைப்­பாட்டை வலி­யுறுத்­தும் என்று நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரை­யில் அவர் கூறி­னார்.

மேற்­கத்­திய நாடு­களை உக்­ரேன் சார்ந்­தி­ருப்­பது, ரஷ்யக் கட்­டுப்­பாட்­டில் கீழுள்ள கிரை­மிய தீப­கற்­பம், டோன்­பாஸ் பகு­தி­க­ளின் நிலைமை ஆகி­யவை ரஷ்யா தீர்வு காண முயலும் மற்ற அம்சங்கள்.

ஏற்­கெ­னவே நடந்த பேச்சு வார்த்­தை­கள் தோல்­வி­ய­டைந்­துள்ள நிலை­யில், இந்­தப் பேச்­சு­வார்த்­தை­யி­லும் பெரிய முன்­னேற்­றம் ஏற்படும் என்று தாம் எதிர்­பார்க்­க­வில்லை என்று உக்­ரே­னிய முக்­கிய அதிகாரி ஒரு­வர் கூறி­யுள்­ளார்.

ஒரு மாதத்­துக்­கும் மேலாக நீடிக்­கும் இந்­தப் போரில், இது­வரை 20,000க்கும் அதி­க­மா­னோர் பலி­யாகிவிட்­ட­னர், 10 மில்­லி­யன் பேர் அக­தி­க­ளாக புலம்­பெ­யர்ந்­துள்­ள­னர் என்று ஸெலன்ஸ்கி கூறி­னார். செச்­சன்­யா­வில் நடந்த சண்­டை­களை விட மோச­மான பாதிப்­பு­களை ரஷ்­யப் படை­யெ­டுப்பு ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

மேலும் செய்தி பக்கம் 8ல்