இந்தியா செல்ல இலவச விசா

1 mins read

வெளி­நாட்­டுப் பய­ணி­களை ஈர்க்க இல­வச சுற்­றுப்­ப­யண விசா வழங்கு­கிறது இந்­தியா. முத­லில் வரு­பவர்­களுக்கு முன்­னு­ரிமை என்ற அடிப்­படை­யில் 500,000 பேருக்கு இல­வச விசா வழங்­கப்­படும் என்று சுற்­றுப் ­ப­ய­ணத் துறை அமைச்­சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்­ளார்.

170 நாடு­களில் வசிப்­போர் இந்த இல­வச விசா­வுக்­குத் தகு­தி­பெ­று­வர். இந்த இ-விசா­வுக்கு இணை­யத்­தில் விண்­ணப்­பம் செய்­ய­லாம் என்றார் அவர்.

ஈராண்­டு­க­ளுக்­கு பிறகு வழக்­க­மான அனைத்­துலக விமா­னச் சேவை­களை மீண்­டும் தொடங்­கி­யுள்ள இந்­தியா, சுற்­றுப்­ப­ய­ணத்­துறைக்­குப் புத்­து­யிர் கொடுக்­கும் நட­வ­டிக்­கை­களை மேற்கொள்கிறது.

கொவிட்-19 தொற்­று ­கா­ர­ண­மாக அனைத்து சுற்­றுப்­ப­யண விசா­வை­யும் 2020ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி இந்­தியா நிறுத்­தி­வைத்­தது. தற்­போது எல்­லை­க­ளைத் திறந்­துள்ள இந்­தியா, பொரு­ளி­யலை மேம்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­களில் ஒன்­றாக சுற்­றுப்­ப­ய­ணத்­துறை­யில் கவ­னம் செலுத்­து­கிறது. சுற்றுப்பயணத்து­றையை மேம்படுத்து ­வது குறித்து ஏப்­ரல் 12, 13ஆம் தேதி­களில் மாநில அர­சு­க­ளு­டன் கூட்­டம் நடை­பெற உள்­ள­தாக திரு கிஷன் ரெட்டி குறிப்­பிட்­டார்.