நிறுவனங்களுக்கு மேலும் $145 மி. வழங்குதொகை

நிறுவனங்களுக்கு மேலும் $145 மி. வழங்குதொகை

3 mins read

வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் மொத்தம் $28.1 பில்லியன் உதவி

நாளை 31ஆம் தேதி­யி­லி­ருந்து வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின் இறு­திக்­கட்­ட­மாக 19,500க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு $145 மில்­லி­யனுக்­கும் அதி­க­மான தொகை வழங்­கப்­ப­ட­வி­ருக்­கிறது. இதன்­மூலம் 289,500க்கும் உள்­ளூர் ஊழி­யர்­க­ளுக்கு ஊதி­யம் வழங்க அந்­நி­று­வ­னங்­க­ளுக்கு ஆத­ரவு கிட்டும்.

சென்ற ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­களால் பாதிக்­கப்­பட்ட உணவு சேவை­கள் போன்ற துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­க­ளுக்கு இந்த வழங்­கு­தொகை கிடைக்­கும்.

இத­னை­ய­டுத்து, ஒட்­டு­மொத்­த­த­மாக கொவிட்-19 தொற்­றுப் பர­வலின்­போது வேலை­க­ளைப் பாது­காப்­ப­தற்­காக நிறு­வ­னங்­க­ளுக்கு $28.1 பில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தொகை வழங்­கப்­பட்­டி­ருக்­கும்.

கடந்த 2020 மார்ச் முதல் டிசம்­பர் மாதம்­வரை உள்­ளூ­ரில் 165,000 வேலை­க­ளைப் பாது­காக்க வேலை ஆத­ர­வுத் திட்­டம் உத­வி­யி­ருக்­கும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது என்­றும் உள்­ளூர் ஊழி­யர்­க­ளுக்கு ஊதி­யம் வழங்க அது கைகொ­டுத்­த­தும் என்­றும் நிதி­ய­மைச்சு, என்­டர்­பிரைஸ் சிங்­கப்­பூர், உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் ஆகி­யவை நேற்று ஒரு கூட்­ட­றிக்கை மூல­மா­கத் தெரி­வித்­தன.

இப்­போது வழங்­கப்­ப­ட­வுள்ள வழங்­கு­தொகை, கடந்த ஆண்டு நவம்­பர், டிசம்­பர் மாதங்­க­ளுக்­கான ஊதி­யத்தை உள்­ள­டக்­கும்.

அவ்­விரு மாதங்­களில் தங்­களின் உள்­ளூர் ஊழி­யர்­க­ளுக்­கான மத்­திய சேம நிதிப் பங்­க­ளிப்­பைக் குறித்த காலக்­கெ­டு­விற்­குள் செலுத்­திய நிறு­வ­னங்­கள் வழங்­கு­தொகை பெறத் தகு­தி­பெ­றும். அவ்­வாறு வழங்­கு­தொகை பெறத் தகு­தி­யுள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு அது­கு­றித்து அஞ்­சல் வழி­யா­கத் தெரி­விக்­கப்­படும்.

மேம்­ப­டுத்­தப்­பட்ட வேலை ஆத­ர­வுத் திட்­டத்­திற்­குத் தகு­தி­பெற, நிறு­வ­னங்­கள் குறிப்­பிட்ட துறை­களைச் சேர்ந்­த­ன­வாக இருக்க வேண்­டும்; குறிப்­பிட்ட தகு­தி­விதி­களை­யும் பூர்த்திசெய்ய வேண்­டும்.

எடுத்­துக்­காட்­டாக, உணவு சேவை­கள் துறை­யைச் சேர்ன்ஹ ஒரு நிறு­வ­னம், சிங்­கப்­பூர் உணவு அமைப்­பி­டம் இருந்து பெற்ற, செல்­லத்­தக்க உணவு உரி­மத்­தைக் கொண்­டி­ருக்க வேண்­டும். அத்­துடன், சிங்­கப்­பூர் தொழில்­துறை தர வகைப்­பாட்­டுக் குறி­யீடு 56 அல்­லது 68104ன்கீழ் அந்­நி­று­வ­னம் பதிவுசெய்­யப்­பட்­டி­ருக்க வேண்­டும்.

பதிவு செய்­யப்­பட்ட உண­வங்­காடி நிலை­யங்­கள், காப்­பிக் கடை­கள், சிற்­றுண்­டி­ய­கம் உள்­ளிட்ட உணவு நிலைய நடத்­து­நர்­களை இந்­தக் குறி­யீ­டு­கள் குறிக்­கும்.

இருப்­பி­னும், இந்­தக் குறி­யீ­டு­களின்­கீழ் பதிவுசெய்­யப்­ப­டாத, செல்­லத்­தக்க உணவு உரி­மத்­தைக் கொண்­டுள்ள பல நிறு­வ­னங்­க­ளுக்­கும் மேம்­ப­டுத்த வேலை ஆத­ர­வுத் திட்­டத்தை நிதி­ய­மைச்­சும் என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பும் முன்­ன­தாக விரி­வு­ப­டுத்­தி­யி­ருந்­தன.

இத­னி­டையே, மிகு­தி­யாக வழங்­கப்­பட்ட $32.2 மில்­லி­ய­னைத் திருப்பிச் செலுத்­தும்­படி 38 நிறு­வனங்­க­ளுக்­குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் அத­னைத் திருப்­பிச் செலுத்த அந்­நி­று­வ­னங்­கள் கடப்­பாடு கொண்­டுள்­ளன என்­றும் அந்த அமைப்­பு­கள் கூறின.

மசே நிதி பங்­க­ளிப்பு கட்டாயம்

இந்­நி­லை­யில், வழங்­கப்­பட்ட உண்­மை­யான ஊதி­யத்­தின் அடிப்­ப­டை­யில் தங்­கள் ஊழி­யர்­க­ளுக்­கான உரிய மத்­திய சேம­நிதி பங்­க­ளிப்­பு­களை நிறு­வ­னங்­கள் கட்­டா­யம் செலுத்த வேண்­டும் என்று வலி­யுறுத்­தப்­பட்­டுள்­ளது. நிறு­வ­னங்­கள் செலுத்­தும் மசே நிதி பங்­க­ளிப்­பு­க­ளின் அடிப்­ப­டை­யி­லேயே வேலை ஆத­ர­வுத் திட்ட வழங்­கு­தொ­கை­யின் மதிப்பு முடி­வு­செய்­யப்­படும்.

அவ்­வ­கை­யில், இம்­மா­தத்­தில் 292 நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வி­ருந்த ஏறக்­கு­றைய $5 மில்­லி­யன் தொகை நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. வழங்­கு­தொ­கைக்­குத் தகுதி­பெ­று­வ­தற்­கான தக்க சான்­று­களை அவை உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யத்­தி­டம் சமர்ப்­பிக்க வேண்­டும்.

"நிறு­வ­னங்­கள் அளித்த தக­வல்­க­ளின் உண்­மைத்­தன்­மை­யை­யும் துல்­லி­யத்­தன்­மை­யை­யும் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் உறு­திப்­ப­டுத்­திய பிறகு அவை வழங்கு­தொ­கை­யைப் பெறும். மறு­ஆய்­வின்­போது ஏதே­னும் பிரச்­சி­னை­கள் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டால் அதற்­கேற்ப வழங்­கு­தொகை சரிக்­கட்­டப்­ப­ட­லாம் அல்­லது மறுக்­கப்­ப­ட­லாம்," என்று தெரிவிக்கப்பட்டது.

வழங்­கு­தொகை மறுக்­கப்­ப­டு­வது­டன், குற்­ற­மி­ழைத்­தோ­ருக்கு 10 ஆண்டுகள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.