ராணுவ நடவடிக்கைகளைக் குறைப்பதாக ரஷ்யா அறிவிப்பு

உக்­ரேன்-ரஷ்யா இடையே 34வது நாளாக நேற்று சண்டை நீடித்த நிலை­யில், அவ்­விரு நாடு­க­ளின் பேரா­ளர்­கள் நேற்று துருக்­கி­யின் இஸ்­தான்­புல் நக­ரில் நேர­டிப் பேச்சு­வார்த்தை நடத்­தி­னர்.

அத­னைத் தொடர்ந்து, உக்­ரே­னின் கியவ், செர்­னி­ஹிவ் நகர்­க­ளைச் சுற்­றிய பகு­தி­களில் ராணுவ நட­வ­டிக்­கை­களை ரஷ்யா பெரிதும் குறைத்­துக்­கொள்­ளும் என்று ரஷ்யத் தற்­காப்பு துணை அமைச்­சர் அலெக்­சாண்­டர் ஃபோமின் தெரி­வித்­துள்ளார்.

இரு­நா­டு­க­ளுக்கு இடையே பரஸ்­பர நம்­பிக்­கை­யை­யும் அடுத்­த­கட்ட பேச்சு வார்த்­தை­க­ளுக்­குத் தேவை­யான நிபந்­த­னை­க­ளை­யும் உரு­வாக்­கும் நோக்­கில் இந்த முடிவை எடுத்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

அதே­போல, தனது பாது­காப்­பிற்கு உத்­த­ர­வா­தம் இருந்­தால் அணி சேரா­மல் நடு­நிலை வகிக்­கத் தயார் என்று உக்­ரேன் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

போலந்து, இஸ்­ரேல், துருக்கி, கனடா ஆகிய நாடு­கள் உக்­ரே­னுக்­குப் பாது­காப்பு உத்­த­ர­வா­தம் அளிக்­கும் நாடு­க­ளா­கச் செயல்­படும் சாத்­தி­யம் உள்­ளது.

பேச்­சு­வார்த்­தைக்­கு­முன் இரு நாட்­டுப் பேரா­ளர்­களும் கைகுலுக்­க­வில்லை என்று உக்­ரேன் தொலைக்காட்சி தெரிவித்தது.

முன்­ன­தாக, சில நிபந்­த­னை­களை ஏற்றுக்கொண்டால் உக்­ரேன் நடு­நிலை வகிக்­கத் தயார் என்று உக்­ரேன் அதி­பர் ஸெலன்ஸ்கி­யும் கூறி­யி­ருந்­தார்.

போர் ஓய்ந்ததும் ரஷ்யாவின் கோரிக்கை தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பது அவரது நிபந்தனைகளில் ஒன்று.

இத­னி­டையே, உக்­ரே­னின் மிக்­க­லாய்வ் நக­ரி­லுள்ள வட்­டார அர­சாங்­கத் தலை­மை­ய­கம்­மீது ரஷ்யா ஏவு­க­ணைத் தாக்­கு­தல் நடத்­தி­யது. அதில் எழு­வர் கொல்­லப்­பட்­ட­தா­க­வும் 22 பேர் காய­முற்­ற­தா­க­வும் அதி­பர் ஸெலன்ஸ்கி தெரி­வித்­துள்­ளார். அதே வேளை­யில், தலை­ந­கர் கியவ்­வுக்கு அரு­கி­லுள்ள இர்­பின் நகரம் மீண்டும் உக்ரேன் கட்­டுப்­பாட்­டில் ­வந்­து­விட்­ட­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!