விமானப் போக்குவரத்துத் துறையில் ஆள்சேர்ப்பு மும்முரம்

விமானப் போக்குவரத்துத் துறையில் ஆள்சேர்ப்பு மும்முரம்

2 mins read

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் நாளை­மு­தல் தளர்த்­தப்­ப­டு­வ­தால் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் என்ற எதிர்­பார்ப்­பில் விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை அதன் மனி­த­வ­ளத்தை வலு­வாக்­கத் தன் ஆள்­சேர்ப்பு நட­வ­டிக்­கை­களை முடுக்­கி­விட்­டுள்­ளது.

கிரு­மித்­தொற்­றுச் சூழ­லால் விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை தவிர்க்­க­மு­டி­யாத விளை­வு­க­ளைச் சந்­தித்­த­து­டன் அதி­க­மான ஊழி­யர்­க­ளை­யும் இழந்­தது. இனி ஏற்­ப­டக்­கூ­டிய தேவைக்­காக, முழு­வீச்­சில் இத்­துறை சார்ந்த அனைத்து அமைப்­பு­களும் தங்­களின் ஆள்­சேர்ப்­புப் பணி­களை மும்­மு­ர­மா­கச் செய்­து­வ­ரு­வ­தாக சாங்கி விமான நிலை­யத்தை நேற்று பார்­வை­யிட்ட போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

நோய்ப் பர­வ­லுக்கு முந்­திய நிலை­யு­டன் ஒப்­பி­டு­கை­யில் 65% முதல் 75% ஊழி­யர்­கள் மட்­டுமே விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யில் நீடித்­தி­ருப்­ப­தாக அமைச்­சர் கூறி­னார். மிகக் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்ட கால­கட்­டத்­தில் பாதி ஊழி­யர்­கள் வெளி­யே­றி­ய­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில் சிங்­கப்­பூர், மலே­சியா மற்­றும் இதர நாடு­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளைப் பணி­ய­மர்த்த விமா­னப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­கள் திட்­ட­மிட்­டுள்­ளன.

புதிய ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்சி அளிக்­க­வும் ஏற்­கெ­னவே உள்ள ஊழி­யர்­கள் புதிய வேலை செயல்­மு­றை­க­ளைப் பழ­கிக்­கொள்­ள­வும் கால அவ­கா­சம் தேவை என்­பதை அவர் வலி­யு­றுத்­தி­னார்.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட அனைத்­துப் பய­ணி­களும் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளத் தேவை­யில்­லா­மல் எளி­தாக சிங்­கப்­பூ­ருக்­குள் நாளை முதல் வர­லாம் என்று அர­சாங்­கம் சென்ற வாரம் அறி­வித்­தது. சிங்­கப்­பூ­ருக்­குள் வரும் முன்­னர் கொவிட்-19 பரி­சோ­த­னையை மட்­டும் அவர்­கள் செய்­திட வேண்­டும்.

இந்த அறி­விப்பு நாட்­டின் எல்­லை­களை மீண்­டும் திறப்­ப­தில் முக்­கி­ய­மான ஒரு படி என்று அமைச்­சர் குறிப்­பிட்­ட­போ­தும் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லை­யும் உரு­மா­று­த­லை­யும் பொறுத்து எல்­லைத் திறப்பு குறித்த கொள்­கை­கள் மாற்­றத்­திற்கு உட்­பட்­டி­ருக்­கும் என்று சுட்­டி­னார்.

சாங்கி விமான நிலை­யம் மூலம் மூன்று மில்­லி­யன் பய­ணி­கள் 2021ஆம் ஆண்டு வந்து சென்­றுள்­ள­னர். நோய்ப் பர­வலுக்கு முன்­னர் 2019ஆம் ஆண்­டில் பதி­வான 68 மில்­லி­யன் பயணி­க­ளின் எண்­ணிக்­கை­யில் இது வெறும் 4.4% மட்­டுமே.

இந்த ஆண்­டின் முதல் இரண்டு மாதங்­களில் 1.42 மில்­லி­யன் பய­ணி­க­ளின் போக்­கு­வரத்து இங்கு பதி­வா­கி­யுள்ள நிலை­யில், அது நோய்ப் பர­வலுக்கு முந்­தைய நிலையை ஒப்­பி­டு­கை­யில் 13 விழுக்­கா­டா­கும்.

இந்த மாதம் நில­வ­ரப்­படி 81 விமான நிறு­வ­னங்­கள் வாரத்­திற்கு 2,800 விமா­னச் சேவை­களை 46 நாடு­க­ளின் 116 நக­ரங்­க­ளுக்கு இணைத்­துள்­ளன.

கொள்­ளை­நோய்க்கு முந்­திய நிலை­யில் பதி­வான பய­ணி­கள் எண்­ணிக்­கை­யில் பாதி­யா­வது இவ்­வாண்டு அடைய முடி­யுமா என்று கேட்­ட­தற்கு திரு ஈஸ்­வரன், "எல்­லை­களை முன்­னரே திறந்து­விட்ட நாடு­கள் இந்­நி­லையை அடைந்­து­விட்­டால் நாமும் அந்­நிலையை அடை­வோம். ஆனால், பய­ணம் சென்­ற­டை­யும் இடத்­துக்­கும் அந்­தப் பய­ணத்­துக்­கும் ஒரே முக்­கி­யத்­து­வம்­தான். நம்­பிக்­கையை வளர்த்­துக்­கொண்டு விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யின் மொத்த ஆற்­ற­லை­யும் பழைய நிலைக்­குக் கொண்­டு­வ­ரு­வதே நம் இலக்கு," என்­றார் அமைச்­சர் ஈஸ்­வ­ரன்.

கூடு­தல் செய்தி - பக்­கம் 2ல்