ஜோகூர், சிங்கப்பூரிடையே சுங்க வரி விலக்கு

ஜோகூர், சிங்கப்பூரிடையே சுங்க வரி விலக்கு

2 mins read

ஜோகூர்-சிங்­கப்­பூர் நில எல்­லை­களைப் பயன்­ப­டுத்தி மலே­சி­யா­வுக்­குள் செல்­லும் அனைத்து வகை வாக­னங்­களும், ஒரு வார காலத்­திற்­குச் சுங்க வரி செலுத்­தத் தேவை­யில்லை என்று மலே­சிய அர­சாங்­கம் நேற்று அறி­வித்­தது. இந்நடைமுறை ஏப்­ரல் 1 முதல் 7 வரை நடப்­பில் இருக்­கும்.

நில எல்­லை­க­ளை மலேசியா திறந்­ததை அடுத்து சுமு­க­மான போக்­கு­வரத்தை உறு­திப்­ப­டுத்த சுங்­கத்­துறை­கள், சுல்­தான் இஸ்­கந்­தார் கட்­ட­டத்­தில் உள்ள குடி­நு­ழைவு மற்­றும் தடைக்­காப்பு வளா­கம், இஸ்­கந்­தார் புத்­தி­ரி­யில் உள்ள சுல்­தான் அபு பக்­கார் வளா­கம் ஆகி­ய­வற்­றில் பய­ணி­க­ளுக்கு இந்த விலக்கு வழங்­கப்­படும் என்று பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் தெரி­வித்­தார்.

மலே­சி­யர்­க­ளுக்­கும் 'டச்-அண்ட்-கோ' மற்­றும் 'ஸ்மார்ட்­டேக்' அட்­டை­களை நிரப்பி அல்­லது பயன்­ப­டுத்­தும் பய­னா­ளர்­க­ளுக்கு இந்­தச் சலுகை கிடைக்­கும் என்றார்.

நாளை­ மு­தல் மலே­சியா அதன் எல்­லை­களை அனைத்­து­லக வரு­கை­யா­ளர்­க­ளுக்­குத் திறக்­க­வுள்­ளது. கொவிட்-19க்கு எதி­ராக முழு­மை­யாகத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­கள் மலே­சி­யா­வுக்­குள் தனிமை உத்­த­ர­வின்றி செல்­ல­லாம்.

அதே வரு­கை­யா­ளர்­கள் சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் நில எல்­லை­கள் வழி பய­ணம் செய்­யும்­போது கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்­ளத் தேவை­யில்லை.

தின­மும் நில­வ­ழிப் பய­ணம் மேற்­கொள்­ளும் பய­ணி­கள் எண்­ணிக்­கை­யி­லும் இனி வரம்பு ஏதும் இருக்­காது. முன்­ன­தாக விடி­எல் பேருந்து­கள் மூலம் தின­மும் சுமார் 4,000 பேர் மட்­டுமே அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். சிங்­கப்­பூ­ரில் பதி­வான வாக­னங்­கள் ஜோகூ­ருக்­குள் செல்­லும்­போது சாலைக் கட்­ட­ண­மாக 20 ரிங்­கிட் (S$6.45) கட்­டத் தேவை­யில்லை என்று திங்­கட்­கி­ழ­மை­யன்று மலே­சி­யப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் வீ கா சியோங் அறி­வித்­தார்.