13 மணி நேரம் இருளில் மூழ்கும் இலங்கை

13 மணி நேரம் இருளில் மூழ்கும் இலங்கை

2 mins read
b8905436-6cde-4363-b94a-29b540a03356
கொழும்பு பெட்ரோல் நிலையம் ஒன்றில் நேற்று டீசலுக் காக தவமிருந்த மக்கள். படம்: ஏஎஃப்பி -

இலங்­கை­யில் மின்­சா­ரத்தை சேமிப்­ப­தற்­காக தெரு விளக்­குள் அணைக்­கப்­ப­டு­கின்­றன.

கடும் பொரு­ளி­யல் நெருக்­க­டி­யில் சிக்­கி­யுள்ள இலங்­கை­யில் இது­வரை இல்­லாத அள­வுக்கு மின் விநி­யோ­கம் பாதிக்­கப்­பட்டுள்ளது.

பங்­குச்­சந்­தை­கள் இரு­ளில் மூழ்­கி­ய­தால் பங்­கு­கள் வீழ்ச்­சி­ய­டைந்­தன. இதை­ய­டுத்து பங்கு வர்த்­த­கம் உட­ன­டி­யாக நிறுத்­தி­வைக்­கப்­பட்­டது.

சுமார் 22 மில்­லி­யன் மக்­கள்­தொ­கை­யைக் கொண்ட அந்­நாட்­டின் அர­சாங்­கத்­திற்கு எரி­பொ­ருள் இறக்­கு­மதி செய்ய போது­மான பண­மில்லை. இத­னால் நேற்­றுக் காலை வரை 13 மணி நேர­மாக இலங்கை இரு­ளில் தத்­த­ளித்­தது.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய எரி­சக்தி அமைச்­சர் பவித்ர வன்­னி­ய­ராச்சி, "நாடு முழு­வ­தும் தெரு விளக்­கு­களை நிறுத்த அதி­கா­ரி ­க­ளுக்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது," என்­றார்.

மின்­சா­ரத்தை ஓர­ள­வா­வது சேமிக்­கும் முயற்­சி­யாக இலங்கை அரசு, இந்த நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ளது. இந்த நிலை­யில் 500 மில்­லி­யன் டாலர் (S$676 மில்­லி­யன் ) மதிப்­புள்ள டீசலை அண்டை நாடான இந்­தி­யா­விடமிருந்து இலங்கை கடன் வாங்கி உள்­ளது.

இந்­தக் கப்­பல் சனிக்கிழமை அன்று இலங்கை வந்து சேரும் என தாம் எதிர்­பார்ப்­ப­தாக அமைச்­சர் வன்­னி­ய­ராச்சி தெரிவித்­தார்.

"டீசல் கப்பல் வந்ததும் சிறிது சுமை குறையும். ஆனால் மே மாதம் வரை மின்வெட்டு தொடரும்," என்று அவர் தெரி வித்தார்.

"தற்போது எங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. ஹைட்ரோ மின்சாரத் திட்டங்களுக்கான தண்ணீரும் நீர்த்தேக்கங்களில் அடிமட்டத்ைத் தொட்டுவிட்டன," என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே பேருந்து மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு டீசல் முக்கிய எரிபொருளாக இருப்ப தால் வியாழன் அன்று நாடு முழு வதும் டீசல் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டது.