பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி ஆட்டம்

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி ஆட்டம்

1 mins read

பாகிஸ்­தா­னில் எதிர்க்­கட்­சி­கள் நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மா­னத்­தைக் கொண்டு வந்­துள்­ள­தால் இம்­ரான் கான் தலை­மை­யி­லான அர­சாங்­கம் ஆட்­டம் கண்­டுள்­ளது. நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நம்பிக்கையில்லாத் தீர்­மா­னத்­தின் மீதான விவாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் விவாதம் தொடங்காமலேயே ஏப்­ரல் 3ஆம் தேதிக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. இந்த நிலை­யில் இம்­ரான் கான் கடைசி பந்து இருக்­கும் வரை ஆடு­வார் என்று பாகிஸ்­தா­னிய அமைச்­சர் ஒரு­வர் குறிப் பிட்டுள்ளார். திரு இம்­ரான் கான் தலைமையிலான கூட்­ட­ணி­யி­லி­ருந்து முக்­கிய கட்சி ஒன்று விலகி எதிர்க்­கட்சியுடன் கூட்டு சேர்ந்­துள்­ளது. இம்ரான் ஆட்சி கவிழ்ந்­தால் பாகிஸ்­தான் முஸ்­லிம் லீகின் (பிஎம்­எல்-என்) தலை­வர் ஷாபாஸ் ஷரீப் பிர­த­ம­ரா­க­லாம் எனக் கூறப்படு­ கிறது.