சிங்கப்பூர்-மலேசியா எல்லையை 33,000 பேர் கடந்தனர்

1 mins read
b845d76a-5a4d-4a2c-9410-1df8571d630e
துவாஸ் சோதனைச்சாவடி வழியாக இன்று மாலை மலேசியாவுக்குப் புறப்பட்ட மோட்டார்சைக்கிளோட்டிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

சிங்கப்பூர்-மலேசியா தரைவழி எல்லைகள் நேற்று நள்ளிரவு மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) மாலை 5 மணி நிலவரப்படி, ஏறத்தாழ 33,700 பேர் எல்லைகளைக் கடந்துள்ளனர்.

உட்லண்ட்ஸ் கடற்பாலம், துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாலம் வழியாக 27,600 பேர் மலேசியாவுக்குச் சென்றதாக குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 9,400 பேர் நடைப்பயணமாக அல்லது பேருந்துகளில் சென்றனர். 9,700 பேர் கார்களிலும் 8,500 பேர் மோட்டார்சைக்கிள்களிலும் சென்றனர்.

மலேசியாவிலிருந்து 3,500 பேர் நடைப்பயணமாக அல்லது பேருந்துகளில் சிங்கப்பூருக்கு வந்தனர். 1,600 பேர் கார்களிலும் 1,000 பேர் மோட்டார்சைக்கிள்களிலும் இங்கு வந்ததாக ஆணையம் கூறியது.