இலங்கை: கொந்தளிக்கும் மக்கள்

இலங்கை: கொந்தளிக்கும் மக்கள்

2 mins read
baae6554-4e30-445f-b130-f92f3a07880b
கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டக் காரர்கள் எரித்த பேருந்து.படம்: ராய்ட்டர்ஸ் -

அமைதிக்கு அரசு கோரிக்கை; வன்செயல் அரங்கேறினால் சுற்றுலா துறையும் படுத்துவிடும் என எச்சரிக்கை

இலங்கை 1948ல் சுதந்­தி­ரம் அடைந்த பிறகு இது­வரை இல்லாத அள­வுக்குப் படு­மோ­ச­மான பொரு­ளி­யல் நெருக்­க­டி­யில் சிக்கிவிட்டது.

மக்­க­ளி­டம் கோபம் கொந்­தளிக்­கிறது. அவர்­க­ளின் கோபம் அந்த நாட்­டின் சக்­தி­வாய்ந்த ராஜ­பக்சே குடும்­பத்தை நோக்கியே பெரும்பாலும் திரும்­பு­கிறது.

நூற்­றுக்­க­ணக்­கான மக்­கள் இப்­போ­தைய அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே பதவி விலகி வேண்டும் என்று கோரி வியா­ழக்­கி­ழமை கொழும்பு புற­ந­கர்ப் பகு­தி­யில் இருக்­கும் அவ­ரு­டைய வீட்­டிற்கு வெளியே வன்செயல் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

பொரு­ளி­யலை சரி­வர கையா­ள­வில்லை என்­ப­தால் அதி­பர் பதவி விலக வேண்­டும் என்று அவர்­கள் கோரி­னர். காவல் துறை­யி­னர் கண்­ணீர் புகைக் குண்­டு­களை வீசி­யும், தண்­ணீரை பீய்ச்சி அடித்­தும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளைக் கலைத்­த­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி­யா­ளர் தெரி­வித்­தார்.

அந்த வன்­செ­யல்­கள் தொடர்­பில் 54 பேர் கைது செய்­யப்­பட்­டார்­கள். காவல் துறை­யி­னர் ஐவர் காயம் அடைந்­தனர் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களில் ஒரு­வர் காயம் அடைந்­த­தாக தெரி­யவந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இரு பேருந்து­கள் உள்ளிட்ட ராணு­வம், காவல் துறைக்­குச் சொந்­த­மான பல வாக­னங்­களைத் தீ மூட்டி எரித்து­ விட்­டார்­கள் ­என்று காவல் துறை பேச்­சா­ளர் தல்­துவா கூறி­ய­தாக ராய்ட்­டர்ஸ் குறிப்பிட்டது.

இத­னி­டையே, தலை­ந­க­ரில் விதிக்­கப்­பட்ட ஊர­டங்கை நேற்று அதி­கா­ரி­கள் அகற்­றி­னர். நேற்று அங்கு அமைதி நில­வி­ய­தாகத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

மொத்­தம் 22 மில்­லி­யன் மக்கள் வாழும் இலங்­கை­யில் இப்­போது 13 மணி நேரம் மின்­தடை நில­வு­கிறது. எரி­பொ­ருள் உள்­ளிட்ட பல­வற்­றை­யும் இறக்­கு­மதி செய்ய போதிய அந்­நிய செலா­வணி கையி­ருப்பு இல்­லை. பெரும் கடனில் இலங்கை சிக்கிவிட்டது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்குச் சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டு உள்ளது.

இவ்­வே­ளை­யில், ஆர்ப்­பாட்­டத்திலும் வன்­செ­ய­லி­லும் ஈடு­பட வேண்­டாம் என்று நாட்டு மக்­களுக்­கு அர­சாங்­கம் கோரிக்கை விடுத்­தது. பொரு­ளி­யல் படு­மோச மாக பாதிக்­கப்­பட்டு உள்ள நிலை யில், வன்­செ­யல், ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­றால் சுற்­றுப் பய­ணி­கள் வரா­மல் போய் சுற்­று­லாத் துறை முடங்­கி­வி­டும் என்று சுற்­றுலா அமைச்­சர் பிர­சன்னா ரண­துங்கா மக்­களை எச்­ச­ரித்­தார். மக்­கள் அமைதி காத்து உதவ வேண்­டும் என்று அவர் கோரினார்.

இந்­நி­லை­யில், வியா­ழக்­கி­ழமை நள்­ளி­ர­வில் நடந்த வன்­செ­ய­லுக்கு அடை­யா­ளம் காணப்­ப­டாத தீவிர வாதக் குழுவே கார­ணம் என்று அதி­பர் அலு­வ­ல­கம் கூறியது.

சமூக ஊட­கத்­தைப் பயன்­படுத்தி மக்­களைக் கிளப்­பி­விட்டு நாட்டை சீர்­கு­லையச் செய்­யும் வகை­யில் அந்­தக் கல­வ­ரம் அரங்­கேற்­றப்­பட்­ட­தாக கைதா­ன­வர்­கள் மூலம் தெரி­ய­வந்து இருக்­கிறது என்­றும் அதிபர் அலு­வ­ல­கம் குறிப்பிட்டது.