'இந்தியாவிற்கும் இலங்கை நிலை ஏற்படலாம்'

'இந்தியாவிற்கும் இலங்கை நிலை ஏற்படலாம்'

1 mins read

பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் அபாயச்சங்கு

இந்­தி­யா­வின் பல மாநி­லங்­க­ளி­லும் அறி­விக்­கப்­பட்­டுள்ள இல­வ­சத் திட்­டங்­கள் பொரு­ளி­யல் ரீதி­யில் சாத்­தி­ய­மற்­றவை என்­றும் அவை இலங்­கை­யில் ஏற்­பட்­டுள்­ளது போன்ற நெருக்­க­டியை இந்­தி­யா­வி­லும் ஏற்­ப­டுத்­தி­வி­ட­லாம் என்றும் இந்திய அரசாங்க உயரதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் கவலை தெரிவித்துள்ளனர்.

தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர் அஜித் தோவல், பிர­த­ம­ரின் முதன்­மைச் செய­லா­ளர் பி.கே.மிஸ்ரா, அமைச்­ச­ர­வைச் செய­லா­ளர் ராஜீவ் கௌரா உள்­ளிட்­டோ­ரு­டன் கடந்த சனிக்­கி­ழமை பிர­த­மர் மோடி நான்கு மணி நேரம் ஆலோ­சனை நடத்­தி­னார்.

அப்­போது, அர­சின் கொள்­கை­கள் குறித்த கருத்­து­க­ளை­யும் அதி­லுள்ள குறை­பா­டு­க­ளை­யும் பிர­த­மர் கேட்­ட­றிந்­தார். அத­னை­த் தொடர்ந்து, இரு­ப­துக்­கும் மேற்­பட்ட செய­லா­ளர்­கள் பிர­த­ம­ரி­டம் தங்­க­ளது கருத்­து­க­ளைப் பகிர்ந்து கொண்டனர்.

அப்­போது, அண்­மை­யில் சட்ட மன்­றத் தேர்­தல் நடந்த ஒரு மாநிலத்­திலும் மற்ற மாநி­லங்­க­ளி­லும் அறி­விக்­கப்­பட்­டுள்ள இல­வசத் திட்­டங்­கள் பொருளியல் ரீதியில் தாக்குப்பிடிக்கக் கூடியதாக இல்லை என்றும் அது இலங்கையில் ஏற்பட்டுள்ளது போன்ற நிலைக்கு நாட்டைத் தள்ளிவிடலாம் என்றும் கவலை தெரிவித்தனர்.