கனடாவில் 21 வயது இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
டொரோண்டோ நகர சுரங்க ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் அவரை மர்ம நபர்கள் சுட்டதாக அந்நகர காவல்துறை தெரிவித்தது.
உத்தரப் பிரதேசத்தில் காஸியாபாத்தைச் சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சென்ற வியாழக்கிழமை மாலை செயின்ட ஜேம்ஸ் டவுனில் கிளென் ரோட்டில் உள்ள ரயில் நிலையத் திற்கு அவர் சென்று கொண்டிருந் தார். அப்போது அவரை சிலர் சுட்ட தாகத் தெரிகிறது.
"உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டது. பின்னர் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்," என்று டொேராண்டோ காவல்துறையின் அறிக்கை தெரிவித்தது.
அப்பாவி மாணவர் கார்த்திக் வாசுதேவ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது என்று அங்குள்ள இந்திய தூதரகம் டுவிட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்தது.
"மாணவரின் குடும்பத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம். உடலை இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல ஆன அைனத்து உதவிகளும் செய்யப்படும்," என்று அது கூறியது.
இவ்வாண்டு ஜனவரியில் கார்த்திக் வாசுதேவ் டோரோண்டாவுக்குச் சென்றார். செனகா கல்லூரியில் நிர்வாகவியல் துறையில் படித்து வந்த அவர் பகுதி நேரமாக உணவவம் ஒன்றில் பணியாற்றிவந்தார்.
கனடாவுக்குப் போவது கார்த்திக்கின் கனவாக இருந்தது என்று என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் அவரது தந்தை ஜிதேஷ் வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
"கவலைப்படாதீங்க, கனடா மிகவும் பாதுகாப்பானது என்று என்னிடம் அடிக்கடி சொல்வான்." என்றார் அவர்.
"என் மகனை இன்று இழந்துவிட்டேன். எனக்கு நீதி வேண்டும். என் மகன் அங்கு சென்று இரண்டு மாதங்களே ஆகிறது.
"அவன் ஒழுங்காகப் படித்துக் கொண்டிருந்தான். எனது மகனுக்கு என்ன நேர்ந்தது என்பது தெரிய வேண்டும். சுட்டவர்களின் நோக்கம் என்ன," என்று துயரத்துடன் ஜிதேஷ் புலம்பினார்.
இதற்கிடையே இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மாணவர் உயிரிழந்ததற்கு தமது இரங்கலை வெளியிட்டுள்ளார்.
டுவிட்டர் பதிவில் மாணவரின் குடும்பத்துக்கு அவர் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்திய மாணவர் ஏன் சுடப்பட்டார் என்பதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. டொரோண்டோ காவல்துறை, கண்காணிப்புக் கேமராவை ஆராய்ந்து மர்ம நபர்களைத் தேடி வருகிறது.