உக்ரேன் போர்: பிரதமர் விளக்கம்

உக்ரேன் போர்: பிரதமர் விளக்கம்

2 mins read

ஜனநாயகங்கள்-ஏகாதிபத்தியங்கள் மோதலாக பார்க்கும்பட்சத்தில் பிரச்சினை சிக்கலாவதாக திரு லீ கருத்து

உக்­ரே­னில் நடக்­கும் போரை ஜன­நா­ய­கங்­க­ளுக்­கும் ஏகா­தி­பத்­தி­யங்­க­ளுக்­கும் இடைப்­பட்ட மோத லாகப் பார்க்­கும்பட்சத்தில் பிரச்சினை சிக்­க­ல­டை­வ­தாக பிரதமர் லீ சியன் லூங் தெரி­வித்து உள்ளார்.

அதன் கார­ண­மாக சீனா தானா­கவே தவ­றான முகா­மில் இருக்­க­வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்டு இருக்­கிறது என்று அவர் கூறினார். ரஷ்­யாவைக் கண்­டிக்க இய­லாத ஒரு நிலை­யில் சீனா இருப்­ப­தற்கு இதுவே கார­ணம் என்று பிர­த­மர் லீ குறிப்­பிட்­டார்.

உக்­ரேன் பிரச்­சினை ஜன­நாயகங்கள், ஏகா­தி­பத்­தியங்கள் போராக பார்க்கப்படாமல் இறை­யாண்மை, சுதந்­தி­ரம், எல்­லை­களைக் காப்­ப­தற்­கான போராக கரு­தப்­பட்­டால் அதை சீனா­கூட ஆட்­சே­பித்து இருக்­காது.

உண்­மை­யி­லேயே அது தனிப்­பட்ட முறை­யில் வலு­வான ஆதரவை வழங்கி இருக்­கும் என்று தி வால் ஸ்தி­ரீட் ஜெர்­னல் செய்­தி­யா­ளர்­க­ளு­டன் நியூ­யார்க்­கில் ஏப்­ரல் 1ஆம் தேதி கலந்­து­ரை­யா­ட­லில் கலந்­து­கொண்ட போது திரு லீ குறிப்­பிட்­டார்.

திரு லீ, இரண்டு வாரங்­களுக்கு முன் அமெ­ரிக்கா சென்­றி­ருந்­த­போது தெரி­வித்த இந்­தக் கருத்­து­களை அவ­ரின் அலு­வ­லகம் நேற்று வெளி­யிட்­டது.

உக்­ரேனை ரஷ்யா ஆக்­கி­ர­மித்து இருக்­கிறது. இதைக் கண்டிக்க சீனா மறுத்து வரு­கிறது.

உக்­ரேன் போருக்கு மூன்று வார காலம் முன்­ன­தாக ரஷ்­யா வுடன் எல்­லை­யில்லா தோழமை உடன்­பாடு ஒன்­றில் சீனா கையெ­ழுத்­திட்­டது. இதை மேற்­கத்­திய நாடு­கள் கடு­மை­யா­கக் குறை­கூறி வரு­கின்­றன. உக்­ரே­னில் நடக்­கும் போரை பல நாடு­கள் ஆத­ரிக்­க­வில்லை என்­பதே உண்மை நில­வ­ரம் என்­றும் திரு லீ குறிப்­பிட்­டார்.

உக்­ரே­னில் நமக்கு எல்­லா ருக்குமே ஒரு பிரச்­சினை. இறை­யாண்மை, சுதந்­தி­ரம், எல்லை ஆகி­யவை பற்றி பேசும் பட்­சத்­தில் பல நாடு­கள் ஒன்­றாக நம்­மோடு சேர்ந்து ஆத­ரவு கொடுக்­கும் என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

இறை­யாண்மை, எல்லைக் கோட்­பா­டு­கள் ஐநா­வில் ஒவ்­வொரு முறை­ எழும்­போ­தும் சிங்­கப்­பூர் அந்­தக் கோட்­பா­டு­களுக்குத் தோள்­கொ­டுத்து இருக்­கும் நாடு­களில் ஒன்று என்­பதைத் திரு லீ சுட்­டிக்­காட்­டி­னார்.

ரஷ்­யா­வுக்கு எதி­ராக சிங்­கப்­பூர் தடை விதித்­தது ஏன் என்­பதை­யும் திரு லீ விளக்­கி­னார்.

உக்­ரே­னில் நிகழ்ந்து இருப்­பவை ஆசி­யாவின் நிலவரங்களில் தாக்­கத்தைக் கொண்டிருக்கும். அதன் கார­ண­மாக இந்த வட்­டா­ரத்­திற்­கான பாது­காப்பு ஏற்­பா­டு­கள் மறு­வடி­வம் பெற இயலும் என்றும் திரு லீ குறிப்­பிட்­டார்.

ஆசி­யா­வில் நேட்டோ பாணி யிலான சூழ்­நிலை உரு­வாகி வரு­வ­தாக விவே­க­மற்ற சிலர் பேசி இருக்­கி­றார்­கள் என்­பதைச் சுட்டிய திரு லீ, ஆனா­லும் ஆசியா வேறு­பட்ட ஒன்று என்று எச்­சரித்­தார்.

ஆசி­ய பசி­பிக் நாடு­களில் ஜப்­பான், தென்­கொ­ரியா, ஆஸ்­தி­ரே­லியா போன்­றவை அமெ­ரிக்­கா­வின் நேச நாடு­க­ளாக இருக்­கின்­றன.

நேச நாடு­க­ளாக அல்­லா­மல் அதே­வே­ளை­யில், நீண்­ட­கா­ல­மாக பாது­காப்பு ஒத்­து­ழைப்பு ஏற்­பா­டு­களைக் கொண்­டி­ருக்­கும் சிங்­கப்­பூர் போன்ற நாடு­களும் இருக்­கின்­றன என்­பதைப் பிரதமர் திரு லீ சுட்­டி­னார்.