புதிய பிரதமரைத் தேர்வு செய்யவுள்ள பாகிஸ்தான் நாடாளுமன்றம்

புதிய பிரதமரைத் தேர்வு செய்யவுள்ள பாகிஸ்தான் நாடாளுமன்றம்

1 mins read
9b01fdc5-86a4-4358-9490-5a396cff3a55
பாகிஸ்தானின் முன்னைய பிரதமர் நவாஸ் ஷரிஃப்பின் சகோதரர் திரு ஷெபாஸ் ஷரிஃப் பிரதமராகப் பொறுப்பேற்பது கிட்டத்தட்ட உறுதி. கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -

பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 11) கூடி புதிய பிரதமரைத் தேர்வு செய்யவுள்ளது.

இந்நிலையில் முன்னைய அரசாங்கத்தை அமைத்த பாகிஸ்தான் தெஹரீக்-இ-இன்சாஃப் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக முடிவு செய்தனர்.

நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் முன்னைய பிரதமர் இம்ரான் கான் தோல்வி அடைந்ததை அடுத்து அவர் பதவியை விட்டு அகற்றப்பட்டார்.

அதைத் தொடர்ந்து பரந்துபட்ட எதிர்த்தரப்பு கூட்டணி ஒன்று பதவி ஏற்கவுள்ளது.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சியின் தலைவர் திரு ஷெபாஸ் ஷரிஃப்பை அக்கட்சியும் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் சேர்ந்து பிரதமர் வேட்பாளராக நிறுத்தியுள்ளன.

அவர் முன்னைய பிரதமர் நவாஸ் ஷரிஃப்பின் சகோதரர் ஆவார்.

முன்னைய அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூட் குரேஷியை திரு இம்ரான் கானின் கட்சி முன்மொழியப்பட்டுள்ளது.

ஆனால் திரு ஷெபாஸ் ஷரிஃப்தான் பிரதமராகத் தேர்வு செய்யப்படுவார் என்பது பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

காலஞ்சென்ற முன்னைய பிரதமர் பெனாசிர் புட்டோவின் மகன் பிலாவால் புட்டோ வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பு ஏற்பார் என்று கூறப்படுகிறது.