பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷரிஃப் தேர்வு

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷரிஃப் தேர்வு

1 mins read
445dc188-0b06-463e-9029-e460f289de5d
பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷரிஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோப்புப் படம்: ஏஎஃப்பி -

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷரிஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானிய நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை கூடி நடத்திய வாக்களிப்பில் அவருக்குப் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன.

திரு ஷெபாஸ் ஷரிஃப் முன்னைய பிரதமர் நவாஸ் ஷரிஃப்பின் தம்பி ஆவார்.

இன்றைய வாக்கெடுப்பில் பதவி இழந்த முன்னைய அரசாங்கத்தை அமைத்த பாகிஸ்தான் தெஹரீக்-இ-இன்சாஃப் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக முடிவு செய்தனர்.

பிரதமருக்கான வாக்கெடுப்பையும் அவர்கள் புறக்கணித்தனர்.

திரு ஷெபாஸ் ஷரிஃப் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் வரை பதவியில் நீடிக்கும்.