கொவிட்-19 பரவலின் தாக்கம்: செந்தோசா பிரானி தீவுகளின் நீண்டகாலத் திட்டங்கள் குறித்து மறுஆய்வு

கொவிட்-19 பரவலின் தாக்கம்: செந்தோசா பிரானி தீவுகளின் நீண்டகாலத் திட்டங்கள் குறித்து மறுஆய்வு

1 mins read
31d0bb85-f2ba-4b52-a4e5-390db74d390a
சிங்கப்பூரின் செந்தோசா சுற்றுலாத் தளம், கொவிட்-19 பரவலால் அதன் நீண்டகாலத் திட்டங்களை மறுஆய்வு செய்து வருகிறது. கோப்புப் படம்: செந்தோசா -

சிங்கப்பூரின் செந்தோசா சுற்றுலாத் தளம், கொவிட்-19 பரவலால் அதன் நீண்டகாலத் திட்டங்களை மறுஆய்வு செய்து வருகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டில் செந்தோசா-பிரானி பெருந்திட்டம் அறிவிக்கப்பட்டது.

அடுத்த 20, 30 ஆண்டுகளில், அந்த இரண்டு தீவுகளையும் மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்த அத்திட்டம் வழிகாட்டுகிறது.

மறுஆய்வின் கீழ், சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக செந்தோசா மேம்பாட்டுக் கழகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

புதிய நடைமுறைப் போக்குகளைப் புரிந்துகொள்வதுடன் கொவிட்-19 தொற்றால் உருவாகி இருக்கக்கூடிய புதிய, நீடித்து நிலைக்கத்தக்க சுற்றுப்பயண வாய்ப்புகளும் ஆய்வுசெய்யப்படும்.

சிங்கப்பூர் சுற்றுப்பயணத் துறையை விரைந்து மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மறுஆய்வு இடம்பெறுகிறது.

சுற்றுப்பயணத் துறைக்கு ஆதரவளிக்க ஏறத்தாழ $500 மில்லியனை ஒதுக்கி இருப்பதாக அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது.