1,200 சடலங்கள் கண்டெடுப்பு

1,200 சடலங்கள் கண்டெடுப்பு

2 mins read

அடுத்த சில நாள்கள் முக்கியமானவை: உக்ரேன் அதிபர் எச்சரிக்கை

கியவ் வட்­டா­ரத்­தில் 1,200க்கும் அதி­க­மான உடல்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக உக்­ரேன் தெரி­வித்­துள்­ளது. அவ்­வட்­டா­ரம் கடந்த மாதம் ரஷ்­யப் படை­க­ளின் ஆக்­கி­ர­மிப்­பில் இருந்­த­போது அவை அங்கு பெரும் அட்­டூ­ழி­யத்­தில் ஈடு­பட்­ட­தாகக் கூறப்­பட்­டது.

உக்­ரேன்­மீது ரஷ்யா படை­ எடுத்து கிட்­டத்­தட்ட ஆறு வாரங்­களா­கி­விட்ட நிலை­யில், கடந்த வாரம் முழு­வ­தும் உக்­ரேன்­மீது ரஷ்யா குண்­டு­மழை பொழிந்­தது. இதில், வட­கி­ழக்­கி­லுள்ள கார்­கிவ் நக­ரில் இவ்­வார இறு­தி­யில் மட்­டும் ஒரு குழந்தை உட்­பட 12 பேர் மாண்டு­போ­யி­னர்.

சண்­டை­யில் முன்­க­ளத்­தில் வெற்றி கிட்­டா­த­தால் ரஷ்­யப் படை­யி­னர் தங்­க­ளது ஆத்­தி­ரத்தை அப்­பா­வி­கள்­மீது காட்டி வரு­வ­தாக கார்­கிவ் வட்­டார ஆளு­நர் ஒலெக் சின­கோ­போவ் தெரி­வித்­தார்.

உக்­ரே­னின் ஆகப் பெரிய தொழில் நக­ர­மான டினிப்­ரோ­வின் உள்­ளூர் விமான நிலை­யம், ரஷ்ய ஏவு­க­ணைத் தாக்­கு­த­லால் கிட்­டத்­தட்ட அழிந்­து­போ­னது.

இத­னி­டையே, கடந்த வெள்­ளிக்­கி­ழமை கிர­மட்­டோர்ஸ்க் நக­ரி­லுள்ள ரயில் நிலை­யத்­தின்­மீது நடத்­தப்­பட்ட ஏவு­க­ணைத் தாக்­கு­த­லில் மாண்­டோர் எண்­ணிக்கை 57ஆக உயர்ந்­தது.

ரஷ்­யப் படை­யெ­டுப்­பால் உக்­ரே­னில் இது­வரை 1,793 பேர் மாண்டு­விட்­ட­தா­க­வும் 2,439 பேர் காய­முற்­ற­தா­க­வும் ஐக்­கிய நாடு­கள் மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், தலை­ந­கர் கியவ்­வைச் சுற்­றிய பகு­தி­களில் மட்­டும் இது­வரை 1,222 உடல்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக உக்­ரே­னிய வழக்­க­றி­ஞர் வென­டிக்­டோவா குறிப்­பிட்­டார்.

தாக்குதலை எதிர்கொள்ள ஆயத்தமாகும் உக்­ரேன்

ஆற்­றல்­மிக்க குண்­டு­வெ­டிப்­பு­க­ள் நாட்­டின் தெற்­கி­லும் கிழக்­கி­லும் உள்ள நக­ரங்­களை உலுக்­கிய நிலை­யில், ரஷ்­யா­வின் புதிய தாக்­கு­தலை எதிர்­கொள்ள உக்­ரே­னி­யப் படை­கள் தயாராகி வரு­கின்­றன.

இந்த நிலை­யில், அனைத்­து­லக ஆத­ர­வைத் திரட்­டும் நட­வ­டிக்­கை­களை முழு­மூச்­சு­டன் மேற்­கொண்டு­வ­ரும் உக்­ரேன் அதி­பர் வொலோ­டி­மிர் ஸெலன்ஸ்கி, வரும் வாரம் முக்­கி­ய­மா­ன­தா­க­வும் பதற்­ற­மா­ன­தா­க­வும் இருக்­க­லாம் என்று எச்­ச­ரித்­துள்­ளார்.

"ரஷ்யா இன்­னும் அச்­சப்­படும். சண்­டை­யில் தோற்­று­வி­டு­வோம் என அஞ்­சும். உண்மையை ஒப்­புக்­கொள்ள நேரி­ட­லாம் என பயங்­கொள்­ளும்," என்று நேற்று முன்­தி­னம் இரவு காணொளி வழி­யாக ஆற்­றிய உரை­யின்­போது திரு ஸெலன்ஸ்கி சூளுரைத்தார்.

இதற்­கி­டையே, ஐரோப்­பிய நாடு ஒன்­றால் உக்­ரே­னுக்கு வழங்­கப்­பட்ட எஸ்-300 எறி­க­ணைத் தடுப்­புக் கரு­வி­களை அழித்­து­விட்­டோம் என்று ரஷ்­யத் தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

ஆஸ்­தி­ரியப் பிர­த­மர்

ரஷ்யா பய­ணம்

இந்தச் சூழலில், பேச்­சு­வார்த்தை மூல­மா­கப் போரை முடி­விற்­குக் கொண்டு­வ­ரும் நோக்­கில் ரஷ்­யத் தலை­ந­கர் மாஸ்கோ செல்­ல­வி­ருப்­ப­தாக ஆஸ்­தி­ரிய நாட்­டின் பிர­த­மர் கார்ல் நெக­மர் கடந்த சனிக்­கி­ழமை தெரி­வித்­தார். ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டினை நேற்று சந்­திக்­க­ இ­ருந்­தார்.

கடந்த பிப்­ர­வரி 24ஆம் தேதி உக்­ரேன்­மீ­தான ரஷ்­யா­வின் படை­யெ­டுப்பு தொடங்­கி­ய­பின், ரஷ்யா சென்ற முதல் ஐரோப்­பி­யத் தலை­வர் நெக­மர்­தான்.

"ராணு­வ­ அடிப்படையில் நாங்­கள் நடு­நி­லை­மையோடு இருக்­கி­றோம். ஆனா­லும், உக்­ரேன் மீதான ரஷ்யா­வின் ஆத்­தி­ர­மூட்­டும் நட­வடிக்கை தொடர்­பில் நாங்கள் தெளி­வான நிலைப்­பாட்­டைக் கொண்­டுள்­ளோம். இந்­தச் சண்டை நிறுத்­தப்­பட வேண்­டும்," என்று டுவிட்­டர் பக்­கம் வாயி­லாக திரு நெக­மர் வலி­யு­றுத்­தியிருக்கிறார்.