மோசமான பொருளியல் நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவித்துவரும் நிலையில், கோத்தபாய ராஜ பக்சே அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டுமென அந்நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், அங்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள வெளி நாட்டவர்களில் சிலர் நேற்று திடீரென அம்பலாங்கொடவில் போராட்டத்தில் குதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எரிபொருள் பற்றாக்குறையால் தாங்கள் ஊர் சுற்றிப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் புலம்பியதாக 'டெய்லி மிரர்' செய்தி தெரிவித்தது. முன்னதாக, எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தபோது மூவர் இறந்துவிட்டதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டு இருந்தது. இதனிடையே, சிலாபத்தில் நேற்று அதிபர் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அந்த மோதலில் இரு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்தச் சூழலில், பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்ற இருந்தார்.
இலங்கையில் சுற்றுப்பயணிகள் போராட்டம்
1 mins read

