பைடன்: புட்டினின் படைகள் இனப்படுகொலை செய்கின்றன

பைடன்: புட்டினின் படைகள் இனப்படுகொலை செய்கின்றன

2 mins read

ரஷ்ய அதி­பர் விளா­டிமிர் புட்­டி­னின் படை­கள் உக்­ரே­னில் இனப் படு­கொலை செய்­த­தாக அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் முதல்­மு­றை­யா­கக் கூறி­யுள்­ளார். உக்­ரேனின் உத்­தி­பூர்வ நக­ரான மரி­ய­போலை தன்­வ­சப்படுத்த ரஷ்யா தீவிர முயற்­சி­களை எடுத்து­வ­ரும் வேளை­யில் திரு பைடன் இவ்­வாறு கூறி­யுள்­ளார்.

பொது­மக்­க­ளுக்கு எதி­ராக ரஷ்யா பல கொடு­மை­களை இழைத்­த­தாக மேற்­கத்­திய நாடு­கள் ஏற்­கெ­னவே குறைகூறி­ வருகின்­றன.

மேலும், உக்­ரே­னின் கிழக்­குப் பகு­தி­யில் ரஷ்யா மோச­மான தாக்கு­தல்­களை மேற்­கொள்ளத் தயா­ராகி வரு­வ­தா­க­வும் அஞ்­சப்­ப­டு­கிறது.

அந்­தத் தாக்­கு­தல்­களில் ரஷ்யா ரசா­யன ஆயு­தங்­க­ளைப் பயன்­படுத்­தக்கூடும் என்­றும் வாஷிங்­டன் எச்­ச­ரித்துள்ளது.

"ஆம், இதை நான் இனப் படு­கொலை என்றே வகைப்­ப­டுத்­து­கி­றேன்," என்று திரு பைடன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார். இதற்கு சில மணி­நே­ரத்­திற்கு முன்­னரே ஐயோவா நக­ரில் ஆற்­றிய உரை­யிலும் அவர் இவ்­வாறு கூறி­யி­ருந்­தார்.

"இதை இனப் படுகொலையாக வகைப்­படுத்­த­மு­டி­யுமா என்­பதை அனைத்­து­லக வழக்­க­றி­ஞர்­கள் முடி­வு­செய்­வர். ஆனால் நான் இதை இப்­படித்­தான் பார்க்கிறேன்," என்­றார் திரு பைடன்.

"உக்­ரே­னிய குடி­ம­க­னா­கக்­கூட ஒருவரும் இருக்­க­மு­டி­யாது என்­பதை புட்­டின் நிலை­நாட்ட முயல்­கி­றார் என்­பது மேலும் மேலும் தெளி­வா­கத் தெரி­கிறது," என்று அவர் குறிப்­பிட்­டார்.

மாஸ்கோ இனப் படு­கொ­லை­யில் ஈடு­ப­டு­கிறது என்று பல­முறை கூறி­வந்த உக்­ரே­னிய அதி­பர் வொலொ­ட­மிர் ஸெலென்ஸ்கி, திரு பைட­னுக்கு நன்றி தெரி­விக்­கும் வகை­யில் "உண்­மை­யான ஒரு தலை­வ­ரின் உண்­மை­யான வார்த்­தை­கள்," என்று டுவிட்­ட­ரில் குறிப்­பிட்­டார்.

"செயல்­க­ளைத் தகுந்த பெயர்­களைக் கொண்டு விளக்­கு­வது தீமையை எதிர்ப்­ப­தில் முக்­கி­யப் பங்கு வகிக்­கும்," என்று திரு ஸெலென்ஸ்கி தமது பதி­வில் கூறி­யி­ருந்­தார்.

உக்­ரே­னின் தலை­ந­கர் கியவிற்கு அருகே இருக்­கும் புக்கா நக­ரில் நூற்­றுக்­க­ணக்­கான பொது­மக்­கள் கொலை செய்­யப்­பட்­ட­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

அது உல­க­ அ­ள­வில் கண்­ட­னத்­திற்கு உள்­ளா­னது. அதைத் தொடர்ந்து திரு புட்­டின் ஒரு போர் குற்­ற­வாளி என்று திரு பைடன் சொல்­லி­யிருந்­தார்.

எனி­னும், இனப் படு­கொலை என்ற வார்த்­தை­களை அவர் இது­வரை பயன்படுத்தியதில்லை.