பேச்சுவார்த்தை நடத்த முன்வரும் இலங்கை பிரதமர்

பேச்சுவார்த்தை நடத்த முன்வரும் இலங்கை பிரதமர்

1 mins read

இலங்­கைப் பிர­த­மர் மஹிந்த ராஜ­பக்சே, அர­சாங்க எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்த முன்­வந்­துள்­ளார்.

சுதந்­தி­ரத்­துக்­குப் பிறகு இலங்கை அதன் ஆக மோச­மான பொரு­ளி­யல் நெருக்­க­டியை எதிர்­கொண்டு வரு­கிறது. அந்­நி­யச் செலா­வ­ணிப் பற்­றாக்­கு­றை­யால் எரி­சக்தி, மருந்து போன்றவற்றுக்கு அந்­நாட்­டில் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. பல மணி­நே­ரம் மின்­த­டை­யும் ஏற்­ப­டு­கிறது.

இதைத் தொடர்ந்து கடந்த சில வாரங்­க­ளாக பல்­லா­யி­ரம் பேர் வீதி­களில் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். குறிப்­பாக தலை­ந­கர் கொழும்­பின் காலி முகத் திட­லில் முகா­மிட்­டுள்ள ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் கவ­னத்தை ஈர்த்­துள்­ள­னர். ராஜ­பக்சே குடும்­பம் பதவி வில­கி­னால்­தான் ஆர்ப்­பாட்­டத்­தைக் கைவி­டப்­போ­வ­தாக அவர்­கள் கூறி­யுள்­ள­னர். அவர்­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்த பிர­த­மர் தயார் என்று அவ­ரது அலு­வ­ல­கம் நேற்று அறிக்கை விடுத்­தது.