நன்றியுடனும் நம்பிக்கையுடனும் புத்தாண்டை வரவேற்ற மக்கள்

நன்றியுடனும் நம்பிக்கையுடனும் புத்தாண்டை வரவேற்ற மக்கள்

2 mins read
aec805d7-8e0d-4a54-bb5a-c78308f963ea
புத்தாண்டு நாளான நேற்று ஸ்ரீவீரமாகாளியம்மன் ஆலயத்திலும் ஸ்ரீ லங்கராமையா பௌத்த ஆலயத்திலும் இறைவனை வழிபட்ட பக்தர்கள். படங்கள்: திமத்தி டேவிட் -
multi-img1 of 2

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் பல­வும் தளர்த்­தப்­பட்­டதால், சித்­தி­ரைப் புத்­தாண்டு நாளான நேற்று பக்­தர்­கள் ஆல­யங்­களில் திர­ளா­கக் கூடி­, இறைவனை வழிபட்டனர்.

இவ்­வாண்டு கவ­லை­கள் பறந்­தோடி இன்­பங்­கள் விரைந்­தோடி வரும் என நம்­பிக்கை கொண்­டு உள்­ள­போதும், தங்­க­ளது தனிப்­பட்ட செல­வு­கள் அதி­க­ரித்து வரு­வதால் எச்­ச­ரிக்­கை­யு­டன் இருப்­ப­தாக அவர்­கள் தெரி­வித்­த­னர்.

சிராங்­கூன் சாலை, ஸ்ரீ வீ­ர­மா­கா­ளி­யம்­மன் ஆல­யத்­தில் நேற்று தாம் எதிர்­பார்த்­த­தை­விட அதி­கக் கூட்­டம் இருந்­த­தா­கக் கூறி­னார் நான்கு பிள்­ளை­க­ளுக்­குத் தாயான விருந்­தோம்­பல்­து­றைப் பணி­யா­ளர் தமிழ்ச்­செல்வி காளி­முத்து, 59.

பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி), மின்­கட்­ட­ணம், உண­வுப்­பொ­ருள் விலை­யேற்­றம் போன்­ற­வற்­றால் வருங்­கா­லத்­தில் செலவு கூடும் என்­றா­லும் சமா­ளித்­து­வி­ட­லாம் என நம்­பு­வ­தாக அவர் சொன்­னார்.

செல­வு­கள் தொடர்ந்து கூடுவது இயல்­பு­தான் என்­றா­லும் கூடு­தல் செலவு ஏற்­ப­டா­தி­ருக்க உடல்­ந­லத்­திற்கு வேண்­டு­வ­தா­கக் கூறி­னார் வர­வேற்­பா­ள­ரா­கப் பணி­புரியும் திருவாட்டி கௌசல்யா ஜெய்சங்­கர், 33. மாறாக, விலை­வாசி உயர்­வைச் சமா­ளிக்க சம்­பள உயர்வு கிட்­ட­வேண்­டும் என்பதே காசா­ள­ரான 22 வயது குமாரி மாலினி ராம­மூர்த்தியின் எதிர்பார்ப்பு.

ஈராண்­டு­க­ளுக்­குப்­பின் நேற்று மீண்­டும் மலே­சியா திரும்­ப­வி­ருந்த தாதி யுவ­ராணி, 35, சிங்­கப்­பூர்-மலே­சியா இடையே நில எல்­லைக் கட்டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தற்­காக இறை­வ­னுக்கு நன்றி செலுத்­து­வ­தா­கக் கூறி­னார்.

ஸ்ரீலங்­க­ரா­மையா பௌத்த ஆல­யத்­தில் சிங்­க­ளர்­கள் புத்­தாண்டு கொண்­டா­டி­னர். இலங்­கை­யில் சிங்­க­ளர்­களும் தமி­ழர்­களும் ஒரு மக்­க­ளாக புத்­தாண்டு கொண்­டாடு­வது வழக்­கம் என்­றும் இந்­நன்­னா­ளில் பௌத்த ஆல­யங்­கள் பொங்­கலைப் போன்றதோர் இனிப்பு உண­வைப் பக்­தர்­க­ளுக்கு வழங்­கும் என்­றும் ஆல­யத்­தின் தலைமை பிக்கு கே. ரத்­தி­னா­னந்த தேரோ தெரி­வித்­தார். சிங்­க­ளர்­கள் மட்­டு­மின்றி தமி­ழர்­களும் நேற்று அங்கு ஆலய வழிபாடு செய்­த­னர்.

சிங்­க­ளப் பெண்­ணைத் திரு­மணம் செய்­துள்ள தமி­ழ­ரும் உடற்­கூட பயிற்­று­விப்­பா­ள­ரு­மான யுவ­ராஜ் துரி­யா­தாசு, 36, தங்­க­ளின் மூன்று மாதப் பெண் குழந்தை ரக்­‌ஷ­யா­வு­டன் இந்து ஆலயத்திற்குச் சென்றுவிட்டு இங்கு வந்­த­தா­கக் குறிப்பிட்டார்.

தற்­போ­தைய நில­வ­ரம் சவால்­மிக்­க­தாக இருந்­தா­லும் நம்­பிக்­கை­யு­டன் தமது புதிய குடும்­பத்­தைத் தொடங்­கி­யுள்­ள­தாக திரு யுவ­ராஜ் கூறினார்.