பூன் லே தாக்குதல்: இருவர்மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு

பூன் லே தாக்குதல்: இருவர்மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு

1 mins read
Google News Preferred Icon

கடந்த 6ஆம் தேதி பூன் லே டிரைவில் இடம்பெற்ற கத்தித் தாக்குதலில் குற்றஞ்சாட்டப் பட்டுள்ள இருவர்மீது, இரண்டாவது ஆடவரைத் தாக்கியது தொடர்பில் மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. முகம்மது சஜித் சலீம், 20, நிஸ்வன் திருச்செல்வம், 19 ஆகிய இருவரும் காயப் படுத்தும் நோக்கத்துடன் கத்தியால் திரு சரக்குமார் என்பவரைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த சனிக்கிழமை முதன்முதலாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவ்விருவர்மீதும் திரு பிரவீன் ராஜ் சந்திரன் என்பவரைத் தாக்கியதற்காக இதேபோன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. சஜித்தும் நிஸ்வனும் வரும் 28ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாவர். குற்றவாளிகள் என உறுதிப் படுத்தப்பட்டால் அவர்களுக்குச் சிறைவாசம், அபராதம், பிரம்படி விதிக்கப்படலாம்.