உக்ரேன் தலைநகர் கியவ்வுக்கு அருகில் ராணுவத் தளங்களை ஏவுகணைகள் கொண்டு
தகர்த்திருப்பதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு நேற்று தெரி
வித்தது.
தனது ராணுவத்தை உக்ரேன் குறிவைத்துத் தாக்குவதால் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கியவ் நகரம் மீது மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படுவது நிச்சயம் என்று ரஷ்யா
சூளுரைத்தது.
உக்ரேனின் மரியபோல்
நகரைத் தனது படைகள் சுற்றி
வளைத்திருப்பதாகவும் அங்குள்ள இலியிச் எஃகு ஆலையை அவை கைப்பற்றியிருப்பதாகவும் ரஷ்யத் தற்காப்பு அமைச்சு கூறியது.
கியவ் நகரில் நேற்று பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக செய்தியாளர்கள் கூறினர்.
கடந்த சில வாரங்களாக கியவ் நகரை நோக்கிச் சென்று
கொண்டிருந்த ரஷ்யப் படைகள்
இம்மாதத் தொடக்கத்தில்
அங்கிருந்து பின்வாங்கின.
உக்ரேனின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் கவனம் செலுத்த வியூகம் வகுப்பதாக ரஷ்யா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பல நாள்களுக்குப் பிறகு கியவ் நகர் மீது
நேற்றுதான் முதல்முறையாக ரஷ்யா மிகக் கடுமையான
தாக்குதல்களை நடத்தியது.
கருங்கடலில் ரஷ்யாவின் பிரதான போர்க்கப்பலான 'மோஸ்க்வா' மூழ்கடிக்கப்பட்டதை அடுத்து கியவ் நகரை ரஷ்யா மீண்டும் தாக்கத் தொடங்கியுள்ளது. தனது ஏவுகணையைக் கொண்டு ரஷ்யப் போர்க்கப்பலை மூழ்கடித்ததாக உக்ரேன் தெரிவித்தது. இதையடுத்து, நேற்று முன்தின இரவு முழுவதும் கியவ் நகரை நோக்கி ரஷ்யா ஏவுகணை மழை பொழிந்தது.
அதில் உக்ரேனிய ராணுவத்துக்காக ஏவுகணைகளை உற்பத்தி செய்த ஆலை ஒன்று அழிக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்தது.
"ரஷ்யா மீது உக்ரேன் நடத்தும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும். எங்கள் தாக்குதலின் தீவிரம் அதிகரிக்கும்," என்று ரஷ்யா கூறியது.
ரஷ்ய கிராமம் மீது உக்ரேனிய ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் தாக்குதல் நடத்தி யதாகவும் அதை ரஷ்யப் படை
யினர் சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷ்யத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
இதற்கிடையே, பிடிபட்ட ரஷ்ய ராணுவ வீரர்களை உக்ரேன் ரஷ்யாவிடம் ஒப்படைத்துள்ளது.
அவர்களுக்குப் பதிலாக ரஷ்யா பிடித்து வைத்திருந்த தனது வீரர்களை உக்ரேன் பெற்றுக்
கொண்டது.
மிகப் பதற்றமிக்க சூழலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் போரில் பிடிபட்ட வீரர்களைச் சொந்த நாட்டிடம் ஒப்படைக்க இருநாடுகளும் இணங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ரஷ்யா கைப்பற்றிய கெர்சோன் நகரில் இது நிகழ்ந்ததாக
உக்ரேனியத் தற்காப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.

