கூடிய விரைவில் சிங்கப்பூரில் கூடுதல் சொகுசுக் கப்பல்கள்

அடுத்த சில மாதங்­களில் கூடு­தல் சொகு­சுக் கப்­பல் நிறு­வ­னங்­களை சிங்­கப்­பூ­ரில் இயங்க வைக்க சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் இலக்கு கொண்­டுள்­ளது.

இந்­தத் திட்­டத்­தின்­மூ­லம் சிங்­கப்­பூ­ரில் இருப்­ப­வர்­க­ளுக்­குக் கூடு­தல் சொகு­சுக் கப்­பல் பய­ணத் தெரி­வு­கள் கிடைக்­கும்.

'டிரீம் குருசஸ்' சொகு­சுக்

கப்­பல் நிறு­வ­னம் கடந்த மாதம் சிங்­கப்­பூ­ரில் அதன் செயல்­பா­டு­களை நிறுத்­திய பிறகு, ராயல் கரீ­பி­யன் இன்­டர்­நே­ஷ­னல் நிறு­வ­னம் மட்­டுமே இங்கு சொகு­சுக் கப்­பல் பய­ணங்­களை வழங்கி வரு­கிறது.

குறிப்­பிட்ட ஒரு நாட்­டிற்­குச் செல்­லா­மல் நடு­க்க­டல் வரை சென்று பிறகு சிங்­கப்­பூர் திரும்­பும்

சொகு­சுக் கப்­பல் பய­ணத்தை ராயல் கரீ­பி­யன் நிறு­வ­னம் தற்­போது

வழங்­கு­கிறது.

"சிங்­கப்­பூ­ரில் இயங்க பல சொகு­சுக் கப்­பல் நிறு­வ­னங்­கள் ஆர்­வம் தெரி­வித்­துள்­ளன. ஆனால் அவை சிங்­கப்­பூ­ரி­லி­ருந்­த­வாறு சொகு­சுக் கப்­பல் பய­ணங்­களை வழங்க சில மாதங்­கள் எடுக்­கும்," என்று சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கத்­தின் சொகு­சுக் கப்­பல் பய­ணப் பிரிவு இயக்­கு­நர் ஆனி சாங் கூறி­னார். தடுப்­பூசி தொடர்­பான சோத­னை­கள் போன்ற ஏற்­பாடு

களுக்­குக் கூடு­தல் நேரம் தேவைப்­படும் என்­றார் திரு­வாட்டி சாங்.

"அடுத்த சில மாதங்­களில் கூடு­த­லாக ஒன்று அல்­லது இரண்டு சொகு­சுக் கப்­பல்­கள் சிங்­கப்­பூர் வந்­த­டை­யும். சிங்­கப்­பூ­ரில் தற்­போது மிகக் குறை­வான சொகு­சுக் கப்­பல்­கள் உள்­ளன. நிலை­மை­யைச் சரி­செய்­வது எங்­க­ளு­டைய கடமை," என்­றார் அவர். 'டிரீம் குருசஸ்' நிறு­வ­னத்­தின் பிர­தான நிறு­வ­ன­மான ஜென்­டிங் ஹாங்­காங்­கிற்கு நிதி பிரச்­சினை ஏற்­பட்­டதை அடுத்து, கடந்த மாதம் 2ஆம் தேதி­யன்று சிங்­கப்­பூ­ரில் வொர்ல்ட் டிரீம் கப்­பல் மூலம் சொகு­சுக் கப்­பல் பய­ணம் வழங்­கு­வதை அது

நிறுத்­தி­யது.

அந்­நி­று­வ­னம் 2020ஆம் ஆண்டு நவம்­பர் மாதத்­தி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரில் சொகு­சுக் கப்­பல் பய­ணங்­களை வழங்­கி­யது. கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்கு முன்பு சிங்­கப்­பூ­ரில் சொகு­சுக் கப்­பல் பய­ணங்­களை வழங்­கிக்­கொண்­டி­ருந்த நிறு­வ­னங்­கள் இப்­போது மீண்­டும் செயல்­ப­டத் தொடங்­க­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கத்­தி­டம் இத்­தா­லி­யைச் சேர்ந்த 'கோஸ்டா குருசஸ்', ஜெர்­ம­னி­யைச் சேர்ந்த 'டியுஐ குருசஸ்', ராயல்

கரீ­பி­ய­னின் 'சில்­வர்சீ குருசஸ்' ஆகி­யவை பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்­றன. சிங்­கப்­பூ­ருக்கு 'கோஸ்டா செரீனா' சொகு­சுக்

கப்­ப­லைக் கொண்டு வரு­வது தொடர்­பா­கக் கழ­கத்­து­டன் இணைந்து செயல்­பட்டு வரு­வ­தாக அந்த நிறு­வ­னத்­தின் தென்

கிழக்­கா­சிய விற்­ப­னைப் பிரி­வுத் துணைத் தலை­வர் திரு பால் சோங் தெரி­வித்­தார். 'கோஸ்டா செரீனா' சொகு­சுக் கப்­பல் இவ்­வாண்டு

நவம்­பர் மாதத்­தி­லி­ருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை

சிங்­கப்­பூ­ரில் இயங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!