கடல்நீரை குடிநீராக்க புது ஆலை சிங்கப்பூரின் 5வது ஆலை திறப்பு; அன்றாடத் தேவையில் 7% அளவு நீரை நாள்தோறும் உருவாக்கித் தரும்

கடல்நீரை குடிநீராக்க புது ஆலை சிங்கப்பூரின் 5வது ஆலை திறப்பு; அன்றாடத் தேவையில் 7% அளவு நீரை நாள்தோறும் உருவாக்கித் தரும்

2 mins read

கடல்­நீரை குடி­நீ­ராக்­கும் சிங்­கப்­பூரின் ஐந்­தா­வது ஆலை ஜூரோங் தீவில் நேற்று திறக்­கப்­பட்­டது.

அதி­ந­வீன தண்­ணீர் ெதாழில்­நுட்­பங்­க­ளு­டன் கூடிய அந்த ஆலை, நாள் ஒன்­றுக்கு 30 மில்­லி­யன் காலன் அதா­வது, 137,000 கன மீட்­டர் குடி­நீரை உரு­வாக்­கித் தரும்.

இந்த அளவு நீரைக்­கொண்டு 55 ஒலிம்­பிக் நீச்­சல் குளங்­களை நிரப்­பி­வி­ட­லாம். சிங்­கப்­பூ­ருக்கு அன்­றா­டம் 430 மில்­லி­யன் காலன் குடி­நீர் தேவைப்­ப­டு­கிறது. இதில் 7 விழுக்­காட்­டுக்குப் புதிய ஆலை பொறுப்பு வகிக்­கும் என்று பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் தெரி­வித்து உள்­ளது.

இந்த ஆலையை இரண்டு அல்­லது மூன்று பேர் மட்­டுமே நிர்­வகித்­து­வி­ட­லாம். அந்த அள­வுக்கு ஊழி­யர்­கள் தேவை இல்­லாத அதி­ந­வீன ஆலை­யா­கப் புதிய ஆலை திகழ்­கிறது.

சிங்­கப்­பூர் தனக்குத் தேவை­யான குடி­நீரை நான்கு வழி­களில் பெறு­கிறது. இறக்­கு­மதி, நீர்த்­தேக்­கம், நியூ­வாட்­டர் ஆகி­யவை இதர மூன்று வழி­கள் ஆகும்.

தண்­ணீர் தேவை 2060ஆம் ஆண்டு வாக்­கில் இரண்டு மடங்­கா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அந்­தத் தேவை­யில் 85 விழுக்­காட்டை நியூ­வாட்­டர், கடல்­நீரை குடி­நீ­ராக்­கு­வது ஆகிய வழி­கள் மூலம் பெறு­வது தனது திட்டம் என்று கழ­கம் ஏற்கெனவே தெரி­வித்து இருக்­கிறது.

சிங்­கப்­பூர் அனைத்­து­லக தண்­ணீர் வார தொடக்­கத்தையொட்டி துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் நேற்று புதிய ஆலையை அதி­கா­ர­பூர்வ முறை­யில் திறந்துவைத்­தார். புதிய ஆலை சுமார் ஐந்து காற்­பந்து திடல் அள­வுக்கு 3.7 ஹெக்­டருக்­கும் அதிக பரப்­பளவு உள்ள இடத்­தில் அமைந்து இருக்­கிறது.

நவீன புதிய ஆலை, இதர ஆலை­களை­விட சுமார் 5 விழுக்­காடு அதிக எரி­சக்தி சிக்­க­னத்தை­யும் சாதிக்­கக்­கூ­டி­யது. இது துவாஸ் பவர் நிறு­வ­னத்­தின் தெம்­புசு பல பய­னீட்டு வளா­கத்­து­டன் ஒருங்­கி­ணைந்து அமைந்து இருப்­பதே இதற்­கான கார­ணம்.

புதிய ஆலை, கடல்­நீரை பெறு­வது, கழிவு­நீரை வெளி­யேற்­று­வது, மின்­சா­ரப் பய­னீடு ஆகி­ய­வற்­றில் அந்த வளா­கத்­து­டன் ஒன்­றிணைந்து செயல்­ப­டு­வ­தால் ஏற்­படக்­கூ­டிய வரு­டாந்­திர எரி­சக்தி மிச்­சம் கணி­ச­மா­னது.

அது கிட்­டத்­தட்ட 1,000 வீவக குடும்­பங்­க­ளுக்­குத் தேவைப்­படும் எரி­சக்தி அள­வுக்­குச் சமம் என்று கழ­கம் கூறி­யது.

புதிய ஆலையை துவாஸ் பவர் நிறு­வ­ன­மும் எஸ்டி இன்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­ன­மும் சேர்ந்த ஒரு கூட்டு நிறு­வ­னம் 25 ஆண்டு காலத்­திற்கு நிர்­வ­கித்து நடத்­தும்.

இத­னி­டையே, புதிய ஆலையைத் திறந்­து­வைத்து பேசிய துணைப் பிர­த­மர் ஹெங், ஜூரோங் தீவு ஆலை, நம்­மு­டைய தண்­ணீர் பய­ணத்­தில் முக்­கி­ய­மான மற்­றொரு மைல்­கல் என்று குறிப்­பிட்­டார்.

கடந்த இரண்­டாண்­டு­களில் இதை­யும் சேர்த்து கடல்­நீரை குடி­நீ­ராக்­கும் இரண்டு ஆலை­கள் செயல்­ப­டத் தொடங்கி உள்ளன என்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

நியூ­வாட்­டர், கடல்­நீரை குடி­நீராக்­கும் நடைமுறை ஆகி­யவை அதிக செலவு பிடிக்­கும் என்­பதைச் சுட்­டிய திரு ஹெங், கடல்­நீரை குடி­நீ­ராக்­கு­வ­தற்கு ஆகும் செலவைக் குறைக்­கும் வகை­யில் ஆய்வு உரு­வாக்­கத்­தில் சிங்கப்பூர் முத­லீடு செய்து வரு­வ­தாகத் தெரி­வித்­தார்.