இரண்டாவது கொவிட்-19 மாத்திரைக்கு இடைக்கால அங்கீகாரம்

இரண்டாவது கொவிட்-19 மாத்திரைக்கு இடைக்கால அங்கீகாரம்

2 mins read

சிங்­கப்­பூ­ரில் இரண்­டா­வது கொவிட்-19 மாத்­தி­ரைக்கு இடைக்­கால அங்­கீ­கா­ரம் வழங்­கப்­பட்­டு இருக்கிறது.

இலே­சா­னது முதல் மித­மான கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள 18 மற்­றும் அதற்­கு­மேல் வய­து­டை­யோ­ருக்­குச் சிகிச்சை அளிக்க 'மோல்­னு­பி­ர­விர்' எனும் அம்­மாத்­தி­ரை­யைப் பயன்­ப­டுத்­த­லாம்.

'மெர்க்' நிறு­வ­னத்­தின் தயா­ரிப்­பான அம்­மாத்­திரை 'லெகெவ்­ரியோ (Lagevrio)' எனும் பெய­ரில் விற்­கப்­படும்.

கிரு­மிப்­ப­ர­வல் கால­கட்­டத்­திற்­கான சிறப்பு நடை­மு­றை­யின்­கீழ் 'மோல்­னு­பி­ர­விர்' மாத்­தி­ரைக்கு இடைக்­கால அங்கீகாரம் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கச் சுகா­தார அறி­வியல் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

கடு­மை­யான கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­படும் அல்­லது மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­படும் அபா­ய­மி­ருப்­பி­னும் மருத்­துவ ரீதி­யில் வேறு பொருத்­த­மான கொவிட்-19 சிகிச்­சைத் தெரி­வு­கள் இல்­லாத பட்­சத்­தி­லும் அம்­மாத்­திரை­யைப் பயன்­ப­டுத்­த­லாம் என்று ஆணை­யம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

அறி­கு­றி­கள் தென்­பட்ட ஐந்து நாள்­க­ளுக்­குள் அம்­மாத்­திரை கொடுக்­கப்­பட வேண்­டும். ஐந்து நாள்­க­ளுக்­கு­மேல் அதனை உட்­கொள்­ளக்­கூ­டாது.

கர்ப்­பி­ணி­கள், தாய்ப்­பா­லூட்­டும் பெண்­கள், 18 வய­திற்­குக் குறைந்­தோர் ஆகி­யோ­ருக்கு 'மோல்­னு­பி­ர­விர்' மாத்­திரை பரிந்­து­ரைக்­கப்­ப­ட­வில்லை.

பொது­வாக, இம்­மாத்­தி­ரையை உட்­கொள்­வோ­ரி­டத்­தில் இலே­சான வயிற்­றுப்­போக்கு, குமட்­டல், தலைச்­சுற்­றல் உள்­ளிட்ட பக்­க­வி­ளை­வு­கள் ஏற்­ப­ட­லாம் என்­பதை மருத்­துவ ஆய்­வு­கள் காட்­டு­வ­தாக ஆணை­யம் குறிப்­பிட்­டது.

மேலும் 16 மருந்தகங்களில் 'பேக்ஸ்லோவிட்' மாத்திரை

இத­னி­டையே, குறிப்­பிட்ட சில கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு 'பேக்ஸ்­லோ­விட்' மாத்­தி­ரை­யைப் பரிந்­து­ரைக்­கும் வகை­யில், மேலும் பல பொதுச் சுகா­தார ஆயத்­த­நிலை மருந்­த­கங்­கள் ஒரு முன்­னோ­டித் திட்­டத்­தின்­கீழ் படிப்­ப­டி­யாக இணை­யும்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 சிகிச்­சைக்கு இடைக்­கால அனு­மதி வழங்­கப்­பட்ட முதல் மாத்­திரை இது­தான். ஃபைசர் நிறு­வ­னத்­தின் தயா­ரிப்­பான இம்­மாத்­தி­ரைக்­குக் கடந்த பிப்­ர­வரி 3ஆம் தேதி சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் இடைக்­கால அங்­கீ­கா­ரம் வழங்­கி­யது.

கொவிட்-19 தொற்­றால் கடு­மை­யாக பாதிக்­கப்­படும் அபா­ய­முள்ள, மருத்­து­வ­ரீ­தி­யில் இச்­சி­கிச்­சை­யைப் பெற தகு­தி­யுள்­ள­வர்­கள் என மருத்­து­வ­ரால் மதிப்­பி­டப்­ப­டு­வோ­ருக்கு 'பேக்ஸ்­லோ­விட்' மாத்­திரை கொடுக்­கப்­படும் என்று சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

அம்முன்­னோ­டித் திட்­டத்­தின்­கீழ், இப்­போது அனைத்­துப் பல­துறை மருந்­த­கங்­களும் 20 பொதுச் சுகா­தார ஆயத்­த­நிலை மருந்­த­கங்­களும் பங்­கெ­டுத்து வரு­கின்­றன. இந்­நி­லை­யில், மேலும் 16 பொதுச் சுகா­தார ஆயத்­த­நிலை மருந்­த­கங்­கள் அதில் இணை­ய­வுள்ளன.