தடுப்பூசி மருந்து ஆலை அமைகிறது

தடுப்பூசி மருந்து ஆலை அமைகிறது

2 mins read

பிரான்­சின் பிர­ப­ல­மான மருந்து தயா­ரிப்பு நிறு­வ­னம் சனோஃபி, சிங்­கப்­பூ­ரில் அதி­ந­வீன தடுப்­பூசி மருந்து ஆலையை அமைக்­கிறது. அந்த நிறு­வ­னம் ஐந்­தாண்­டு­களில் இரண்டு இடங்­களில் இரு ஆலை­களை அமைக்க $1.3 பில்­லி­யன் முத­லீடு செய்­கிறது.

அவற்­றில் ஓர் ஆலை பிரான்­சி­லும் $638 மில்­லி­யன் முத­லீட்­டில் மற்­றோர் ஆலை சிங்­கப்­பூர் துவாசி­லும் அமை­யும் என்று அறி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

எதிர்­கா­லத்­தில் கிரு­மித்­தொற்று ஏற்­படும்போது அதை ஒடுக்க தேவைப்­ப­டக்­கூ­டிய புதிய தடுப்­பூசி மருந்தை உட­னுக்­கு­டன் பரி­சோ­தித்­துப் பார்க்க இந்­தப் புதிய ஆலை வழி­வ­குக்­கும்.

குழந்­தை­க­ளுக்­கான தடுப்­பூ­சி­மருந்துகள், சளிக்­காய்ச்­சல், இளம்­பிள்ளை­வா­தம், மஞ்­சள் காமாலை ஆகி­ய­வற்­றுக்­கான தடுப்­பூசி மருந்து, மருத்­து­வர்­களால் பரிந்­துரைக்­கப்­படும் மருந்­து­கள் ஆகி­ய­வற்றை சனோஃபி நிறு­வ­னம் தயாரிக்­கிறது.

இந்த நிறு­வ­னம் உல­க­ள­வில் மிக முக்­கிய நிறு­வ­ன­மா­கும். சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி மருந்து தொடர்­பான திட்­டங்­களை மேற்­கொள்­ளப்போவ­தாக அண்­மை­யில் இந்த நிறு­வ­னம் அறி­வித்து இருந்­தது.

ஜெர்­ம­னி­யின் 'பயோ­என்­டெக்' நிறு­வ­ன­மும் 'ஹில்­லமன் லெப­ரட்­ட­ரிஸ்' என்ற நிறு­வ­ன­மும் இங்கு உற்­பத்தி ஆலை­களை அமைக்­கின்­றன. 'தெர்மோ ஃபிஷர் சையின்­டி­ஃபிக்' நிறு­வ­ன­மும் ஆலை ஒன்றை அமைக்­கிறது.

எதிர்­கா­லத்­தில் கிரு­மித்­தொற்று ஏற்­ப­டும்­போது அதை உட­டி­ன­யாக செயல்­பட்டு ஒடுக்க இவற்­றின் மூலம் சிங்­கப்­பூ­ருக்­கும் இந்த வட்­டா­ரத்­திற்­கும் புதிய பலம் ஏற்­படும்.

சிங்­கப்­பூ­ரில் அமை­யும் தனது தடுப்­பூசி ஆலை அதி­ந­வீ­ன­மாக இருக்­கும் என்று சனோஃபி தெரி­வித்து இருக்­கிறது.

அந்த வகை ஆலை உல­கில் இது­வரை வேறு எங்­கும் இல்லை என்று அது கூறி­யது. முற்­றி­லும் மின்­னி­லக்­க­ம­ய­மாக இருக்­கும் புதிய ஆலை, ஒரே நேரத்­தில் நான்கு வித­மான தடுப்­பூ­சி­க­ளைத் தயா­ரிக்­கும் ஆற்­ற­லைக் கொண்­டது என்­றும் அந்த நிறு­வ­னம் விளக்கி இருக்­கிறது.

புதிய ஆலை 2025 முடி­வில் கட்டி முடிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

துவாஸ் உயி­ரி­யல் மருத்­துவ தொழில் பேட்­டை­யில் அமை­யும் அந்த ஆலை, உள்­ளூ­ரில் 200 பேருக்கு வேலை வழங்­கும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

புதிய ஆலைக்­கான நிலம் அகழும் நிகழ்ச்சி நேற்று நடந்­தது. துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் அதில் கலந்­து­கொண்­டார்.

கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டால் அதைச் சமா­ளிக்க எப்­போ­துமே நாம் ஆயத்­த­மாக இருக்க வேண்டும் என்­பது மிக முக்­கி­யம் என்பதை கொவிட்-19 கிருமி மறு­உறு­திப்­ப­டுத்தி இருக்­கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 கிருமி மங்கி வரு­கிறது என்­றா­லும் கூட அதற்கு எதி­ரான வேகத்தை நாம் குறைத்து­வி­டக் கூடாது என்றும் திரு ஹெங் அந்த நிகழ்ச்­சி­யில் பேசியபோது தெரி­வித்­தார்.

ஆகை­யால், சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி மருந்து தயா­ரிப்பு வேகம் எடுத்து வரு­வ­தால் எதிர்­கா­லத்­தில் தொற்று ஏற்­ப­டும்­போது அதைத் திறம்­பட சமா­ளிக்க இந்த வட்­டா­ரத்­தில் அதிக ஆற்­றல் இருக்­குமென அவர் தெரி­வித்­தார்.