சிங்கப்பூருக்கு வருபவர்கள் கொவிட்-19 பரிசோதனை செய்ய தேவையில்லை

சிங்கப்பூருக்கு வருபவர்கள் கொவிட்-19 பரிசோதனை செய்ய தேவையில்லை

1 mins read
66923d6d-f9d0-4004-aea3-5e48c3f41ecd
படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூருக்கு வரும் முழுமையான தடுப்பூசி போட்டுக்கொண்டோர் கொவிட்-19 பரிசோதனை செய்ய வேண்டியதில்லை. இந்தப் புதிய நடைமுறை ஏப்ரல் 26ஆம் தேதி நடப்புக்கு வரும்.

தரை, ஆகாய வழி சிங்கப்பூருக்கு வருவதற்கு முன் பயணிகள் பரிசோதனைக்குப் பதிவு செய்துகொள்ள அவசியம் இருக்காது. அதோடு சோதனைக்கான கட்டணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

மலேசியாவிருந்து தரை வழி சிங்கப்பூருக்குள் நுழைபவர்களுக்கு பரிசோதனை நடைமுறை முன்னதாக அகற்றப்பட்டது.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 13 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய விதிமுறைகள் பொருந்ததாது. அவர்கள் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன் பரிசோதனை செய்தாக வேண்டும்.

அதோடு இங்கு வந்தவுடன் தங்களைத் தனிமைபடுத்திக்கொள்ளவேண்டும்.