கூடுதலான வெளிநாட்டு ஊழியர்கள் வெளியிடங்களுக்குச் செல்லலாம்

கூடுதலான வெளிநாட்டு ஊழியர்கள் வெளியிடங்களுக்குச் செல்லலாம்

1 mins read
ab5a79e1-3801-4170-a76c-3608a54f2b0f
வார இறுதி நாள்கள், பொது விடுமுறை நாள்களில் 50,000 வரையிலும் வாரநாள்களில் 25,000 வெளிநாட்டு ஊழியர்கள் வரையிலும் சமூக இடங்களுக்குச் செல்ல முடியும். படம்: ராய்ட்டர்ஸ் -

வரும் ஏப்ரல் 26ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் கூடுதலான வெளிநாட்டு ஊழியர்கள் சமூகத்தில் உள்ள இடங்களுக்குச் செல்ல முடியும்.

வார இறுதி நாள்கள், பொது விடுமுறை நாள்களில் 50,000 வரையிலும் வாரநாள்களில் 25,000 வெளிநாட்டு ஊழியர்கள் வரையிலும் சமூக இடங்களுக்குச் செல்லலாம்.

ஒவ்வொரு முறையும் அவர்கள் எட்டு மணி நேரம் வரை அவர்கள் அந்த இடத்தில் இருக்கலாம்.

வெளிநாட்டு ஊழியர்கள் தற்போது வாரயிறுதி நாள்களில் 30,000 பேர் வரையிலும் வாரநாள்களில் 15,000 வரையிலும் செல்ல அனுமதி உண்டு.

அத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வெளிநாட்டு ஊழியர்களும் சமூக இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

பெரும்பாலான சூழல்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டதன் அடிப்படையிலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை முன்னிட்டு இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.