இதுவரை இல்லாதபடி ஏராளமான தளர்வுகள்

இதுவரை இல்லாதபடி ஏராளமான தளர்வுகள்

1 mins read

நோய்த் தொற்று சூழ்நிலை ஆரஞ்சு நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு இறங்கியது.

ஒன்றுகூட வரம்பில்லை; சமூக இடைவெளியும் தேவையில்லை.

வேலையிடங்களுக்கு ஊழியர்கள் அனைவரும் திரும்பலாம்.

பெரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வரம்பு அகற்றம். (இரவுநேர கேளிக்கைத் தொழில்கள் நீங்கலாக)

பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி அடிப்படையிலான பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்துவது அகற்றப்படும்.

டிரேஸ்டுகெதர், சேஃப் என்ட்ரி பெரும்பாலான இடங்களில் இனி தேவை இராது.

மே 1 முதல் எல்லைக் கடந்த பேருந்துச் சேவைகள், டாக்சி சேவைகள் மீண்டும் தொடங்கும்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான சமூக வருகை அனுமதி வரம்பு அதிகரிக்கப்படும்.