ராணுவத்தை பணியில் இறக்கிய இலங்கை அதிபர்

ராணுவத்தை பணியில் இறக்கிய இலங்கை அதிபர்

1 mins read

இலங்­கை­யில் அரசு எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்­தின்­போது கொல்­லப்­பட்ட வருக்கு ஈமச்­ச­டங்கு நடக்­க­வி­ருந்த நிலை­யில் அந்த நாட்­டின் அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே, ராணு­வத்தை மூன்று நாள் பணி­யில் ஈடு­ப­டுத்த உத்தரவிட்டார்.

இலங்­கை­யில் உணவு, எரி­பொருளுக்குக் கடு­மை­யான பற்­றாக்­குறை நில­வு­கிறது. பண­வீக்­கம் விண்ணை முட்­டி­விட்­டது.

வர­லாறு காணாத பொரு­ளி­யல் பிரச்­சி­னையை அந்த நாடு எதிர்­நோக்­கு­கிறது. அதி­பர் பதவி விலக வேண்­டும் என்று தொடர்ந்து போராட்­டம் நடந்து வரு­கிறது.

ஆனா­லும் பதவி விலக அதி­பர் மறுத்து வரு­கி­றார்.

நாட்­டின் மத்­தி­யில் இருக்­கும் ரம்­புக்­கனா என்ற ஊரில் சில நாட்­களுக்கு முன் நடந்த ஆர்ப்­பாட்­டத்­தில் காவல்­துறையின் துப்பாக்கிச் சூட்­டுக்கு ஒரு­வர் மாண்­டு­விட்­டார்.

அவ­ருக்­கான ஈமச்­ச­டங்கு நேற்று நடக்கவிருந்­தது.

இந்த நிலை­யில், ரம்­புக்­க­னா­விலும் அதன் பக்­கத்து வட்­டா­ரங்­களி­லும் ராணு­வத்­தி­னர் சனிக்­கிழமை வரை பணி­யில் இருப்­பார்­கள் என்று இலங்கை தக­வல் துறை அறிக்கையில் தெரி­வித்­தது.

அதேவேளையில், வன்­செ­யல் மர­ணம் தொடர்­பில் மூன்று உயர் அதி­கா­ரி­களை அந்த நாட்­டின் காவல்­துறை வேறு இடங்­க­ளுக்கு இடம் மாற்றி உத்­த­ர­விட்­டது.

நாட்­டில் அதி­பர் ஆட்சி முறையை முடி­வுக்கு கொண்டு வரும் வகையில் அந்த நாட்­டின் எதிர்த்­தரப்பு அர­ச­மைப்­புச் சட்ட திருத்­தங்­களை முன்­மொ­ழிந்து உள்ளது.

இலங்கை பிரச்­சி­னைக்­குத் தீர்வு­காண அந்த நாட்டு அர­சாங்­கம் இந்த ஆண்டு உட­ன­டி­யாக US$4 பில்­லி­யன் உதவி வேண்­டும் என்று கோரி பல தரப்­பு­க­ளை­யும் அணுகி வரு­கிறது.