மகிந்த ராஜபக்சேக்கு நெருக்கடி; ஆதரவாளரிடம் இருந்தே எதிர்ப்பு

மகிந்த ராஜபக்சேக்கு நெருக்கடி; ஆதரவாளரிடம் இருந்தே எதிர்ப்பு

1 mins read

இலங்­கைப் பிர­த­மர் பத­வி­யி­லி­ருந்து மகிந்த ராஜ­பக்சே விலக வேண்­டும் என்ற எதிர்ப்­புக்­கு­ரல் வலுத்து வரு­கிறது.

இது­வரை ஆத­ர­வா­ள­ராக இருந்த அமைச்­சரே தமக்கு எதி­ரா­கத் திரும்­பி­யுள்­ள­தால் பிர­த­மர் மகிந்­த­விற்­குப் பெரும் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது.

ஊடக அமைச்­சர் நாலக கொட­ஹெ­வா­வும் கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­க­ளும் அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்­சே­யின் அலு­வ­ல­கத்­திற்கு வெளியே போரா­டி­வ­ரும் ஆயி­ரக்­கணக்­கா­னோ­ருக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர்.

இலங்­கை­யில் மாதக்­க­ணக்­கில் உணவு, எரி­பொ­ருள் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளுக்­குப் பற்­றாக்­குறை நில­வு­கிறது. விலை­வா­சி­யும் வர­லாறு காணாத அள­விற்கு உயர்ந்­து­விட்­ட­தால் நாட்­டில் போராட்டம் நீடித்து வருகிறது.

இந்­நி­லை­யில், மகிந்த ராஜ­பக்­சே­யின் தீவிர விசு­வா­சி­யா­கக் கூறப்­பட்ட திரு கொட­ஹெவா, பிர­த­ம­ரைப் பத­வி­நீக்­கம் செய்ய வேண்­டும் என்­றும் இடைக்­கா­ல­மாக அனைத்­துக் கட்சி அர­சாங்­கம் அமைக்­கப்­பட வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

போராட்­டக்­கா­ரர் ஒரு­வ­ரைக் காவல்­துறை சுட்­டுக்­கொன்­று­விட்­டதை அடுத்து, அர­சாங்­கம் அதன் நம்­ப­கத்­தன்­மையை இழந்­து­விட்­ட­தாக அவர் சொன்­னார். அத்­து­டன், அமைச்­சர் பத­வி­யைத் துறப்­ப­தா­கத் தாம் பதவி வில­கல் கடிதம் கொடுத்­தும் அதி­பர் அதனை ஏற்க மறுத்து­விட்­ட­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, இந்­தியா நன்­கொ­டை­யாக வழங்­கி­யி­ருக்­கும் குறைந்­தது 101 வகை மருந்­துப்­பொ­ருள்­களும் மருத்­து­வக் கரு­வி­களும் வரும் புதன்­கி­ழமை இலங்­கைக்கு வந்­து­சே­ரும் என்று சுகா­தார அமைச்­சர் சன்னா ஜெய­சு­மன தெரி­வித்­துள்­ளார். அதுபோல், இந்தோனீசியாவும் இலங்கைக்கு மருத்துவ உதவி வழங்கவுள்ளது.