பயணத்துறை வலுவாக மீளும் என எதிர்பார்ப்பு

பயணத்துறை வலுவாக மீளும் என எதிர்பார்ப்பு

2 mins read

விடுமுறையைக் கழிக்க சுற்றுலா வருவோர் அதிகரிப்பு

அண்­மைய வாரங்­க­ளாக சுற்­றுப்­ப­ய­ணி­கள் வருகை அதி­க­ரித்து இருப்­ப­தால், இவ்­வாண்­டில் பய­ணத்­துறை வலு­வாக மீட்­சி­ய­டை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வரும் 26ஆம் தேதி செவ்­வாய்க்­கி­ழ­மை­ முதல், கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வரு­முன் கொரோனா பரி­சோ­தனை செய்து­கொள்­ளத் தேவை­யில்லை என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் சுற்­றுப்­ப­ய­ணி­கள் வருகை மேலும் உய­ரும் என்­பது சுற்­றுப்­ப­ய­ணத் துறை­யி­ன­ரின் எதிர்­பார்ப்பு.

கடந்த மாதம் 150 சுற்­றுப்­பயணி­க­ளைக் கையாண்ட நிலை­யில், இம்­மா­தம் அந்த எண்­ணிக்கை 700ஆக உயர்ந்­து­விட்­டது என்­றார் 'நாம் ஹோ டிஎம்சி' சுற்றுப்பயண நிறு­வன இயக்­கு­நர் மகேஷ் பவ­னாஸ்­கர்.

"மே மாதத்­தில் வலு­வான வளர்ச்­சியை, ஏப்­ர­லைப்­போல குறைந்­தது இரு­ம­டங்­காக இருக்­கும் என எதிர்­பார்க்­கி­றோம்," என்­றார் திரு மகேஷ்.

விமா­னம் அல்­லது கடல்­வ­ழி­யா­கச் சிங்­கப்­பூ­ருக்­குக் குழு­வாக வரும் குடும்­பங்­க­ளைப் பொறுத்­த­மட்­டில், பிசி­ஆர் அல்­லது ஏஆர்டி பரி­சோ­தனை தொந்­த­ர­வா­க­வும் செல­வு­மிக்­க­தா­க­வும் இருக்­கக்­கூ­டும் என்­றும் அவர் கூறினார்.

இந்­நி­லை­யில், தடுப்­பூசி போட்­ட­வர்­கள் பய­ணத்­திற்­கு­முன் பரி­சோ­தனை செய்­து­கொள்­ளத் தேவை­யில்லை என அறி­வித்­து இ­ருப்­பது சுற்­று­லாத் துறைக்கு மிகப் பெரிய ஊக்­கு­விப்பு என்று சொன்­னார் 'குளோ­பல் டிக்ஸ்' நிறு­வ­னத்­தின் தலை­மைச் செய­லாக்க அதி­காரி சான் சீ கோங்.

"குழு வரம்பு போன்ற மற்ற கட்­டுப்­பா­டு­கள் நீக்­கப்­ப­டு­வ­தும் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் பய­ணத்தை எளி­தாக்­கும். தாய்­லாந்து, இந்­தோ­னீ­சியா போன்ற அண்டை நாடு­களும் போக்­கு­வ­ரத்­துக் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­யுள்­ளன. இவை­யெல்­லாம் இந்த வட்­டா­ரத்தை நோக்­கிச் சுற்­றுப்­ப­ய­ணி­களை ஈர்த்து, சிங்­கப்­பூர் சுற்­றுப்­ப­ய­ணத் துறை வளர்ச்­சிக்­குப் பங்­க­ளிக்­கும்," என்­றார் அவர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் கிட்­டத்­தட்ட 57,000 சுற்­றுப்­ப­ய­ணி­களும் பிப்­ர­வ­ரி­யில் 68,000 சுற்­றுப்­ப­ய­ணி­களும் சிங்­கப்­பூர் வந்­த­னர். மார்ச் மாதத்­தில் அந்த எண்­ணிக்கை 120,000ஆக உயர்ந்­தது.

இவ்­வாண்­டின் முதல் மூன்று மாதங்­களில் இந்­தியா, இந்­தோ­னீ­சியா, மலே­சியா ஆகிய நாடு­களில் இருந்து அதி­க­மா­னோர் வந்­த­னர். இந்­தி­யா­வி­லி­ருந்து மட்­டும் கிட்­டத்­தட்ட 55,000 பேர் வந்­த­னர்.

'எலி­வேட்­டட் கன்­சல்­டன்சி அண்ட் டிரெய்­னிங்' நிறு­வ­னத்­தைத் தோற்­று­வித்­த­வ­ரும் சுற்­றுப்­ப­யண ஆலோ­ச­க­ரு­மான டாக்­டர் பர்க்­கத்­துன்­னிசா கூறு­கை­யில், 2023ஆம் ஆண்­டில் அல்­லது அதன்­பின்னர் பய­ணங்­கள் கொவிட்-19 பர­வ­லுக்கு முன்­பு இ­ருந்த நிலையை எட்­டும் என்று எதிர்­பார்ப்­ப­தா­கக் கூறி­னார்.

ஆயி­னும், அண்­மைய கட்­டுப்­பா­டு­கள் தளர்­வால், எதிர்­பார்ப்­பதை­விட விரை­வா­கப் பய­ணத்­துறை மீட்சி காணும் என்­பது டாக்­டர் பர்க்­கத்­துன்­னி­சா­வின் நம்­பிக்கை.

அதே நேரத்­தில், ஊழி­யர் பற்­றாக்­குறை போன்ற சில இடர்ப்­பா­டு­க­ளைப் பய­ணத்­துறை எதிர்­கொள்ள நேரி­ட­லாம் என்­றார் அவர். மற்ற நாடு­க­ளைப்­போல, விமான நிறு­வ­னங்­களும் தங்­கு­வி­டு­தி­களும் அதி­க­ரித்­து­வ­ரும் தேவை­யைச் சமா­ளிக்க முடி­யா­மல் திணறி வரு­வ­தா­கத் தெரி­கிறது.

பய­ணி­கள் வருகை உயர்வு, ஹோட்­டல்­கள், சுற்­று­லாத்­த­லங்­கள் போன்ற இடங்­க­ளி­லும் நேர்­மறைத் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தத் தொடங்­கி­யுள்­ளது.

ஹோட்­டல்­களில் முன்­ப­திவு அதி­க­ரித்து வரு­கிறது. 'அக்­கார்' குழும ஹோட்­டல்­களில் இந்த மா­தத்­தில் இருந்து வாராந்­திர முன்­ப­திவு 20% கூடி­யுள்­ளது.

அது­போல, சுற்­று­லாத்­த­லங்­களி­லும் வெளி­நாட்­டுப் ப­ய­ணி­களின் வருகை கூடி­யி­ருப்­ப­தாக சிங்­கப்­பூர் சுற்­று­லாத்­த­லங்­கள் சங்­கத்­தின் தலை­வர் டாக்­டர் கெவின் சியோங் தெரி­வித்­தார்.