பிரதமர் லீ: சிங்கப்பூர் கிருமிப்பரவலை சமாளித்ததில் நம்பிக்கை மிக முக்கிய பங்காற்றியது

பிரதமர் லீ: சிங்கப்பூர் கிருமிப்பரவலை சமாளித்ததில் நம்பிக்கை மிக முக்கிய பங்காற்றியது

2 mins read
0fce9dd4-2aaa-44da-abea-497ab5082a7e
ஷங்ரிலா ஹோட்டலில் ஞாயிறு (ஏப்ரல் 24) அன்று நடைபெற்ற சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் விரிவுரை, இரவுவிருந்தில் பிரதமர் லீ சியன் லூங் உரையாற்றினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் கொவிட்-19 பரவலிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அந்தப் பாடங்கள் வீணாய் போக அனுமதிக்கக்கூடாது என்றும் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

மருத்துவத் துறை உன்னதத்தைக் கட்டிக்காப்பதும் பொதுச் சகாதாரத்தில் திறன்களை மேலும் வளர்ப்பதும் அந்தப் பாடங்களில் சிலவாகும்.

அத்துடன், சிங்கப்பூர் கொவிட்-19 பரவலை சமாளித்ததற்கு நம்பிக்கைதான் ஆக முக்கிய காரணம் என்றும் அது மிகவும் விலை மதிப்புள்ள வளம் என்றும் பிரதமர் கூறினார்.

ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் விரிவுரை மற்றும் இரவுவிருந்தில் அவர் உரையாற்றினார்.

சிங்கப்பூரர்களுக்கு இடையிலும் அவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலும் பல்லாண்டுகளாக உருவாக்கப்பட்ட வலுவாக பொதுத்துறை சார்ந்த நம்பிக்கை மற்ற நாடுகளிலிருந்து சிங்கப்பூரை வேறுபடுத்துகிறது என்று திரு லீ கூறினார்.

சிங்கப்பூரர்கள், சிங்கப்பூரின் நலனை அரசாங்கம் மனத்தில் வைத்துள்ளது என்ற நம்பிக்கை, அரசாங்கம் செயல்திறன் வாய்ந்தது என்றும் அது சிங்கப்பூரர்களின் சார்பில் சரியான முடிவுகளை என்றும் நம்பிக்கை, தங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் குடிமக்கள் தங்கள் பங்கை ஆற்றுவார்கள் என்ற நம்பிக்கை ஆகியவை இதில் அடங்கியுள்ளது.

அதில் சிங்கப்பூரின் பொது சுகாதாரக் கட்டமைப்பு மீது சிங்கப்பூரர்கள் வைத்திருந்த நம்பிக்கை பெரும் பங்கை வகித்தது என்று திரு லீ குறிப்பிட்டார்.

அந்த நம்பிக்கையை தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்ற பிரதமர், சிங்கப்பூர் தான் செயல்படும் விதத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.

அத்துடன் கிருமிப்பரவலில் முன்களத்தில் இருந்து செயல்பட்ட சுகாதாரத்துறை ஊழியர்களுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

கிருமிப்பரவலின்போது சிங்கப்பூர் பொது மருத்துவமனை ஊழியர்கள் சந்தித்த பல்வேறு அனுபவங்கள் பற்றிய நூலையும் திரு லீ வெளியிட்டார்.