நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பதில் பங்களிப்பு

நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பதில் பங்களிப்பு

1 mins read
ff1b4506-63fd-4eac-8549-421a4916a2e5
நிகழ்வில் ஒரு மூதாட்டியுடன் பேசும் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் கோ. படம்: ஸ்ரீ நாராயண மிஷன் -

சமய நல்­லி­ணக்­கத்­தைப் பேணு­வதற்­கும் சம­யங்­க­ளைப் பற்றி தெரிந்­து­கொள்­வ­தற்­கும் பல இன சம­யத்­தினர் புனித ரம­லான் மாத நோன்­புத் துறப்பு நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­ற­னர். ஸ்ரீ நாரா­யண மிஷன் தாதிமை இல்­லத்­தில் நேற்று மாலை நடைபெற்ற நோன்புத் துறப்பு விருந்­தில் இல்­ல­வா­சி­கள், சமூ­கத் தலை­வர்­கள் உள்ளிட்டோர் ஒன்­று­கூ­டி­னர்.

இஸ்­லா­மிய முறைப்­படி பிரார்த்­த­னை­கள் செய்­யப்­பட்ட பிறகு அனை­வ­ரும் நோன்­புத் துறப்­பில் ஈடு­பட்­ட­னர். கிட்­டத்­தட்ட 80 பேர் வட்ட மேசை­களில் அமர்ந்து உண­வுப் பெட்­டி­களில் பரி­மா­றப்­பட்ட உண­வைச் சாப்­பிட்டு மகிழ்ந்­த­னர்.

நிகழ்ச்­சி­யில் ஸ்ரீ நாரா­யண மிஷன் தனது மேம்­பட்ட இணை­யத்­த­ளத்தை வெளி­யிட்­டது.

செய்தி: கி. ஜனார்த்­த­னன்