ஆயுதங்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் உக்ரேன்

ஆயுதங்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் உக்ரேன்

1 mins read

அமெ­ரிக்­கா­வின் வெளி­யு­றவு அமைச்­சர் ஆன்­டனி பிளிங்­க­னும் தற்­காப்பு அமைச்­சர் லோய்ட் ஆஸ்­டி­னும் நேற்று உக்­ரே­னுக்கு அதி­கா­ரத்­து­வப் பய­ணம் மேற்­கொண்­ட­னர். போர் தொடங்­கி­ய­தி­லி­ருந்து அமெரிக்­கா­வின் ஆக உய­ரிய அதி­கா­ரி­கள் உக்­ரே­னுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளது இதுவே முதல்­முறை.

"அவர்­கள் இங்கு ஒன்­றை­யும் கொண்டு வரா­மல் இருக்­கக்­கூடாது," என்று உக்­ரேன் அதி­பர் வொலொ­ட­மிர் ஸெலென்ஸ்கி கூறினார்.

"குறிப்­பிட்ட சில பொருள்­க­ளும் குறிப்­பிட்ட ஆயு­தங்­களும் கொண்டு­வ­ரப்­படும் என்று நாங்­கள் எதிர்­பார்க்­கி­றோம்," என்­றும் அவர் சொன்னார்.

ரஷ்யா உக்­ரேன் மீது படை­யெடுத்து கிட்­டத்­தட்ட இரண்டு மாதங்­கள் ஆகி­விட்ட நிலை­யில் அமெ­ரிக்க அமைச்­சர்­கள் உக்­ரேனுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டனர். உக்­ரே­னின் தெற்கு, கிழக்­குப் பகு­தி­களில் சண்டை தீவி­ர­மடைந்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

மேற்­கத்­திய நாடு­க­ளி­லி­ருந்து பல ஆயு­தங்­கள் தனக்கு வழங்கப்­படு­வ­தைத் தொடர்ந்து போரில் உக்­ரே­னால் ரஷ்­யாவை வெல்­ல­முடியும் என்ற நம்­பிக்கை அதி­கரித்து வரு­வ­தாக திரு ஸெலென்ஸ்கி கூறி­யி­ருந்­தார்.

"உக்­ரேனை ஆக்­கி­ர­மித்­தி­ருப்­போர் வெளி­யே­ற­வேண்­டிய நாள் விரை­வில் வரும் என்பதை அவர்களுக்கு உணர்த்துவோம்," என்று திரு ஸெலென்ஸ்கி தமது நாட்டு மக்­களுக்கு ஆற்­றிய உரை­யில் குறிப்பிட்­டார்.

ஆகக் கடைசி நில­வ­ரப்­படி சண்டை தீவி­ர­ம­டைந்­த­போ­தும் போரில் 24 மணி ­நே­ரத்­தில் ரஷ்யா அதிக முன்­னேற்­றம் காண­வில்லை என்று பிரிட்­ட­னின் தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

பதி­ல­டி­யாக அமைந்­துள்ள உக்­ரே­னி­யப் படை­களின் தாக்­கு­தல்­கள் ரஷ்­யா­வின் முயற்­சி­க­ளுக்கு இடை­யூ­றாக இருந்து வரு­வ­தா­க­வும் அமைச்சு கூறியது.