பதவி விலக மறுக்கும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே

பதவி விலக மறுக்கும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே

1 mins read
d5934c3d-e3d6-4f18-814f-dc95fd35152c
திரு மகிந்த ராஜபக்சேயைப் பதவி விலகக் கோரி கொழும்பில் அவரது வீட்டுக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டதால் அங்கு பதற்றம் நிலவியது. படம்: ராய்ட்டர்ஸ் -

இலங்­கை­யில் பிர­த­மர் மகிந்த ராஜ­பக்சே பதவி விலக வேண்­டு­மென்­றும் இடைக்­கால அர­சாங்­கம் அமைக்­கப்­ப­ட­வேண்­டும் என்­றும் பொது­மக்­க­ளி­டையே போராட்­டம் வலுத்து வரு­கிறது. எனி­னும், அந்த கோரிக்­கையை ராஜ­பக்சே நிரா­க­ரித்­தது மட்­டும் அல்­லா­மல் அப்­படி இடைக்­கால அரசு அமைக்­கப்­பட்­டால் அதற்­கும் தாமே தலைமை வகிப்­பா­ரென்­றும் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­யுள்­ளார்.

"மாறு­பட்ட கொள்­கை­க­ளைக் கொண்­ட­வர்­கள் நேருக்கு நேராக பார்த்­துக்­கொள்ள முடி­யா­த­போது, இது­போன்ற அர­சி­யல் அமைப்­பு­க­ளால் எந்­தப் பய­னும் இல்லை," என்று அவர் கூறி­யி­ருக்­கி­றார். ஒரு­வேளை அப்­ப­டி­யொரு அமைச்­ச­ரவை அமைந்­தால் அதற்கு தாமே தலை­வர் என்­றும் அவர் கூறி­னார்.

முக்­கிய இறக்­கு­ம­தி­க­ளைச் செய்ய இய­லாத வகை­யில் போதிய பண­மின்றி இலங்கை அர­சாங்­கம் தவித்து வரு­வ­தா­கக் கூறி ஏப்­ரல் ஒன்­ப­தாம் தேதி முதல் அந்­நாட்­டின் பல்­வேறு நகர சாலை­களில் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் ஆர்ப்­பாட்டங்களை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர். இலங்­கை­யில் அத்­தி­யா­வ­சி­யப் பொரு­ள்க­ளின் விலை கணி­ச­மா­கக் கூடி­யுள்­ளது. எரி­பொ­ருள், மருந்­து­கள், மின்­சார விநி­யோ­கம் ஆகி­ய­வற்­றில் கடு­மை­யான தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, கொழும்­பில் அனைத்து பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தி­ன­ரும் கொழும்பு கோட்டை ரயில் நிலை­யத்­திற்கு அருகே ஆர்ப்­பாட்­டம் நடத்­தத் தொடங்­கி­யதாக சில தகவல்கள் தெரிவித்தன.

மேலும், ஆர்ப்­பாட்­டங்­கள் இடம்­பெற்று வந்த காலி­மு­கத்­தி­ட­ல் தற்­போது மூடப்­பட்­டுள்­ளது. அங்கு ராணு­வத்­தி­ன­ரும் காவல்­து­றை­யி­ன­ரும் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

அங்கு பாது­காப்பு முடுக்கி­விடப்­பட்டுள்ளது.