பத்தாண்டு இல்லாத அளவுக்கு விலைவாசி ஏறியது

பத்தாண்டு இல்லாத அளவுக்கு விலைவாசி ஏறியது

1 mins read
b843405e-e905-47b3-b7d4-478e9d704b58
முக்கியமாக உணவு, சேவைகள், தனியார் போக்குவரத்து, மின்சாரம், எண்ணெய் விலை முதலியவை விலை ஏற்றம் கண்டன. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கடந்த மார்ச் மாதம் உணவு, சேவைகள், தனியார் போக்குவரத்து, மின்சாரம், எண்ணெய் விலை முதலியவை விலை ஏற்றம் கண்டதை அடுத்து, விலைவாசி பத்தாண்டுகள் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன.

பயனீட்டார் விலை எனப்படும் விலைவாசி கடந்த மாதம் 5.4 விழுக்காடு கூடியது.

குடியிருப்புச் செலவுகள், தனியார் போக்குவரத்து இரண்டும் சேர்க்கப்படாத மூலாதார பணவீக்கம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தைவிட இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 2.9 விழுக்காடு உயர்ந்துள்ளது.

மூலாதார பணவீக்கமும் ஒட்டுமொத்த பணவீக்கமும் 2012 மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு முதன்முறையாக இவ்வளவு அதிகம் உயர்ந்துள்ளன.

தங்கும் செலவுகள், தனியார் போக்குவரத்து தவிர்த்த மற்ற துறைகளில் விலைவாசி வரும் மாதங்களில் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கபபூர் நாணய ஆணையமும் வர்த்தக தொழில் அமைச்சும் இதை திங்கள் (ஏப்ரல் 25) அன்று இதைத் தெரிவித்தன.

இவ்வாண்டு இறுதிவாக்கில் விலைகள் மட்டுப்படும் என்று அவை கூறின.