ஃபேரர் பார்க்கில் 1,600 வீடுகள்

ஃபேரர் பார்க்கில் 1,600 வீடுகள்

2 mins read
cabd625c-5cce-4970-bc68-cf383b5c2e1c
ஃபேரர் பார்க் திடல் சிங்கப்பூரின் அதிகார பூர்வமற்ற விளையாட்டு மையமாக 1940கள் முதல் 1980கள் வரை திகழ்ந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நீச்சல்குள வளாகத்திற்குப் பதில் புதிய விளையாட்டு மையம் உருவாகும்

ஃபேரர் பார்க்­கில், 10 ஹெக்­டர் பரப்­புள்ள இடத்­தில் கிட்­டத்­தட்ட 1,600 புதிய வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக அடுக்­கு­மாடி வீடு­கள் கட்டப்­படும். விளையாட்டு, பொழு­து­போக்கு வச­தி­க­ளு­டன் அந்த வீடு­ கள் ஒருங்­கி­ணைந்து இருக்­கும்.

ஒரு புதிய விளை­யாட்டு மைய மும் அந்த வச­தி­களில் உள்­ளடங்­கும். வீவக, ஸ்போர்ட்ஸ் சிங்­கப்­பூர், நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் ஆகிய மூன்­றும் இந்த விவ­ரங்­களை நேற்று அறி­வித்­தன.

அங்கு கட்­டப்­படும் பிடிஓ வீடு­கள் இன்­னும் மூன்று ஆண்­டு­களுக்­குள் விற்­ப­னைக்கு விடப்­படும் என்­றும் அறி­விக்­கப்­பட்டது.

புதிய வீடு­கள், 19 காற்­பந்துத் திடல்­கள் அள­வுக்குப் பரப்­புள்ள இடத்­தில் அமைந்து இருக்­கும்.

டோர்­செட் ரோடு, கெங் லீ ரோடு, ஹாம்ஸ்­ஷா­யர் ரோடு, ரேஸ் கோர்ஸ் ரோடு ஆகி­யவை அந்த இடத்­தின் எல்­லை­க­ளாக இருக்­கும். புதிய வீடு­கள் லிட்­டில் இந்­தி­யா­விற்­கும் ஃபேரர் பார்க் எம்­ஆர்டி நிலை­யம், தேக்கா சந்தை, கேகே மகளிர், சிறார் மருத்து­வ­மனை ஆகி­ய­வற்­றுக்­கு அரு­கில் அமைந்திருக்­கும்.

புதிய கட்டுமான இடத்தில் ஏறத்தாழ 20 விழுக்காட்டு இடம் விளையாட்டு, பொழுதுபோக்குப் பயனீட்டிற்காக ஒதுக்கப்படும்.

அந்த இடத்தின் உள்ளே 1.2 ஹெக்டர் பரப்பளவுள்ள பசுமை இடத்தில் ஒரு திடலும் பூங்காவும் அமைந்து இருக்கும்.

முன்னாள் குத்துச்சண்டை பயிற்சிக் கட்டடம் அப்படியே வைத்துக்கொள்ளப்பட்டு அது பல நோக்கு சமூக விளையாட்டு இடமாக மாற்றப்படும். புதிதாக உரு­வா­கும் வீட்டு மேம்­பாடு­களில் ஒன்­று­டன் அது ஒருங்­கி­ணைந்து இருக்­கும்.

உட­லு­றுதி முகப்­பு­கள், மூன்று தலை­மு­றை­யி­ன­ரும் கலந்­து­கொள்ளும் விளை­யாட்­டுத் திடல்கள் முத­லா­னவை இதர வசதி­களில் உள்­ள­டங்­கும். புதிய குடியிருப்புப் பேட்டை வழி­யா­கச் செல்­லும் ஒரு மெது­வோட்டப் பாதை பல்­வேறு வச­தி­க­ளை­யும் ஒருங்­கிணைப்­ப­தாக இருக்­கும்.

குழந்­தை பரா­ம­ரிப்பு நிலை­யம், கடை­கள் போன்ற புதிய மேம்­பாடு­களும் இடம்­பெற்று இருக்­கும்.

ஃபேரர் பார்க் நீச்­சல்குள வளா­கம் அக­லும். அதற்குப் பதி­லாக அதே இடத்தில் ஒரு புதிய விளை­யாட்டு மையம் கட்­டப்­படும். புதிய மையத்­தில் நீச்­சல் குளங்­களும் இதர விளை­யாட்டு வச­தி­களும் இருக்­கும். மேல் விவ­ரங்­கள் தயா­ரா­ன­தும் அறி­விக்­கப்­படும் என்று இந்த அமைப்­பு­கள் கூறின.

ஃபேரர் பார்க் புத்­து­யிர் பெறு­வ­தால் புதிய குடி­யி­ருப்­பா­ளர்­கள் வரு­வார்­கள். பூங்கா, விளை­யாட்டு வச­தி­களை அனு­ப­விக்க புதி­ய­வர்­களும் வரு­வார்­கள்.

பாரம்­ப­ரி­யத்தைக் கட்­டிக்­காக்­கும் அதே­வே­ளை­யில், சமூ­கத்­தில் முன்­னி­லும் அதி­க­மா­ன­வர்­க­ளின் தேவை­களை ஃபேரர் பார்க் நிறை­வேற்­றும் என்று அவை கூறின.