மோசடியில் பறிபோன $200 மில்லியனை மீட்ட காவல்துறை

மோசடியில் பறிபோன $200 மில்லியனை மீட்ட காவல்துறை

1 mins read
5a2fda1e-a8c3-4ed6-ac4d-3897ff6455cc
இவ்வாண்டுக்கான காவல்துறை வேலைத்திட்டக் கருத்தரங்கில் மோசடி எதிர்ப்பு நிலையத்தைப் பற்றி மூத்த போலிஸ் அதிகாரிகள் விவரமளித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரின் மோசடி எதிர்ப்பு நிலையம், கடந்த கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் மோசடியில் இழக்கப்பட்ட 200 மில்லியன் வெள்ளியை மீட்டுத் தந்துள்ளனர்.

வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவின்கீழ், மோசடி எதிர்ப்பு நிலையம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.

2019 முதல் கடந்த மாதம் வரை, மோசடி எதிர்ப்பு நிலையம் 27,000 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது. மோசடி செய்யப்பட்ட 200 மில்லியன் வெள்ளியை அது மீட்டுள்ளது.

இனி மோசடிப் பண மீட்பைத் தவிர, மோசடிக்கு ஆளானவர்கள் அதை உணர்ந்து போலிசில் புகார் அளிக்கும் முன்னரே, அதிகாரிகள் மோசடிக்காரர்களைத் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறி வைக்கின்றனர்.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 26) நடந்த காவல்துறை வேலைத்திட்டக் கருத்தரங்கில் இது தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மோசடி எதிர்ப்புப் பிரிவு அமைக்கப்பட்டு பின்ன அது மோசடி எதிர்ப்பு தளபத்தியமாக மாற்றப்பட்டது.

சிங்கப்பூர் காவல்துறையில் உள்ள அனைத்து மோசடி எதிர்ப்புக் குழுக்களும் அதன்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

அத்துடன், சிங்கப்பூரில் உள்ள ஏழு போலிஸ் நிலப் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் இப்போது மோசடிக்கு எதிரான குழு அமைக்கப்பட்டுள்ளது. மோசடிகளை எதிர்ப்பதில் சிறப்புப் பயிற்சி பெற்ற அதிகாரிகள் அவற்றில் பணியாற்றுகின்றனர்.