கட்டுப்பாடுகள் தளர்வால் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் மக்கள்

கட்டுப்பாடுகள் தளர்வால் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் மக்கள்

2 mins read
7d7c4e70-9d67-433c-a7e4-3393ed7b5f59
குழு வரம்பு, சேஃப்என்ட்ரி, பாதுகாப்பு இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் கேலாங்கில் உள்ள ரமலான் சந்தையில் நேற்று மாலை காணப்பட்ட மக்கள் கூட்டம். படம்: திமத்தி டேவிட் -

ஆ. விஷ்ணு வர்­தினி

பெரும்­பா­லான கொவிட்-19 விதி­முறை­கள் தளர்த்­தப்­பட்­டு­விட்ட நிலை­யில், மக்­கள் மீண்­டும் இயல்பு­நிலைக்­குப் படிப்­ப­டி­யா­கத் திரும்ப முயன்று வரு­கின்­ற­னர்.

பெரிய குழுக்­க­ளாக மக்­கள் இனி கூட­லாம் என்­ப­தால், எதிர்­வரும் பண்­டி­கை­க­ளைக் கோலா­க­ல­மாக, குடும்­பத்­தோடு கொண்­டா­ட­லாம் என மகிழ்ச்­சி­யு­டன் தெரி­வித்­தார் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரிப் பட்­ட­தாரி சீனத் நிஷா, 20.

"ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு நோன்­புப் பெரு­நா­ளுக்கு குடும்­பத்­தார் அனை­வ­ரை­யும் வீட்­டிற்கு அழைக்க முடி­யும் என்­ப­தால் இது மறக்­க­மு­டி­யாத நோன்­புப் பெரு­நாளாக இருக்­கும்," என்­றார் அவர்.

"சென்ற ஆண்டு என் மக­ளின் திரு­ம­ணத்­திற்கு உற்­றார் உற­வினர்­கள் 50 பேரை மட்­டுமே அழைக்க முடிந்­தது. இவ்­வாண்டு நடக்­க­ உள்ள என் மக­னின் திரு­ம­ணத்­திற்கு 260 பேரை அழைக்க முடி­யும் என்­பது நிறை­வ­ளிக்­கிறது," என்­றார் திரு­வாட்டி கேத்­த­ரீன், 58.

இருந்தாலும், இட­வ­சதி அளிக்­கும் சில அமைப்­பு­களும் நிறு­வனங்­களும் இன்­னும் உச்ச வரம்பை அம­லாக்­கு­வ­தாக அவர் வருத்­தத்­து­டன் கூறி­னார்.

நாள்­தோ­றும் அதி­கா­லை­யில் எழுந்து ஒன்­றரை மணி நேரம் பயணம் செய்து பணி­யி­டத்­திற்குச் செல்ல வேண்டும் என்பதால், வேலை­யி­டத்­திற்கு மீண்­டும் திரும்­ப விரும்­ப­வில்லை என்­றார் திரு­வாட்டி ஜெ. ஜெயா, 35.

பிள்­ளை­கள் வீட்­டி­லி­ருந்து வேலை பார்த்­த­போது குடும்­பத்­திற்­காக அதிக நேரம் ஒதுக்க முடிந்­ததாகக் கூறினார் அவ­ரின் தாயார் திரு­வாட்டி வி.கே.நாயகி, 64.

வீட்­டில் முடங்­கியுள்ள மூத்­தோர் பலருக்கும் விதி­மு­றை­கள் தளர்வு ஆறுதல் அளித்துள்ளது.

சமூக நிகழ்­வு­க­ளுக்­கும் ஆடல், பாடல் நிகழ்­வு­க­ளுக்­கும் செல்­வ­தில் இல்­லத்­த­ர­சி­யான 70 வயது திரு­வாட்டி விம­லா­தே­விக்கு மிகுந்த ஆர்­வம். வாரம் ஒரு­மு­றை­யா­வது புதி­ய­வர்­க­ளைச் சந்­தித்து, நண்­பர்­க­ளு­டன் பேசி மகிழ்­வதை அவர் எதிர்­பார்த்­தி­ருப்­பார். ஈராண்­டு­களுக்­குப் பிறகு இப்­போது மீண்­டும் நிகழ்வு­களில் பங்கேற்று, பாடு­வதை ஆவ­லு­டன் எதிர்­நோக்­கி­யி­ருப்­ப­தாக அவர் சொன்­னார்.