வணிகம், முதலீடுகளுக்காக முழுமையாகக் கதவுகளைத் திறந்து வைத்துள்ளது சிங்கப்பூர்

வணிகம், முதலீடுகளுக்காக முழுமையாகக் கதவுகளைத் திறந்து வைத்துள்ளது சிங்கப்பூர்

2 mins read

அமெரிக்கப் பயணத்திற்குப்பின் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் ஃபேஸ்புக்கில் பதிவு

கொவிட்-19 பெருந்­தொற்­றுக்­குப் பிறகு சிங்­கப்­பூர் தனது கட்­டுப்­பாடு­க­ளைப் பேர­ள­வில் தளர்த்­தி­இருக்கும் நிலை­யில், வணி­கத்­திற்­கா­க­வும் முத­லீ­டு­க­ளுக்­கா­க­வும் சிங்­கப்­பூர் தனது கத­வு­களை முழு­மை­யா­கத் திறந்து வைத்­துள்­ளது என்­றும் புதிய முன்­னோக்­கிய பாதையை வகுத்­துள்­ளது என்­றும் நிதி­ய­மைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

"நாம் ஒரு சிறிய, திறந்த நாட்­டி­னர். அத­னால்­தான் இவ்­வு­ல­கின்­மீது நாம் தீவிர ஆர்­வம் கொண்­டுள்­ளோம். நமக்­கான இடர்­கள், வாய்ப்­பு­கள்­மீது மட்­டு­மன்றி, ஒட்டு­மொத்த உல­கின்­மீ­தும் நாம் ஆர்­வம் கொண்­டுள்­ளோம்," என்று அதி­கா­ர­பூர்வ பத்து நாள் அமெ­ரிக்­கப் பய­ணத்­திற்­குப் பிறகு, தாம் இட்­டுள்ள ஃபேஸ்புக் பதி­வில் அமைச்­சர் வோங் குறிப்­பிட்­டுள்­ளார்.

சிங்­கப்­பூர் கொடியை வெளி­நாடு­களில் பறக்க விடு­வ­தி­லும் அனைத்­து­ல­கப் பங்­கா­ளி­க­ளு­டன் உற­வு­களை மறு­வு­று­திப்­ப­டுத்­து­வதிலும் பொரு­ளி­யல் முதல் நீடித்த நிலைத்­தன்மை, புத்­தாக்­கம் வரை­யி­லான புதிய துறை­களில் ஒத்­து­ழைப்பு குறித்து ஆலோ­சிப்­ப­தி­லும் தாம் மகிழ்ச்­சி­ய­டை­வ­தாக திரு வோங் கூறி­யுள்­ளார்.

"இவை­யெல்­லாம் உல­கத்­து­ட­னான நமது பிணைப்­பு­களை வலுப்­படுத்­த­வும் நம் மக்­க­ளுக்கு அதிக வாய்ப்­பு­களை ஈர்க்­க­வும் உத­வும்," என்­றார் அவர்.

இம்­மா­தம் 16 முதல் 25ஆம் தேதி­வரை வாஷிங்­ட­னுக்­கும் நியூ­யார்க்­கும் திரு வோங் பய­ணம் மேற்­கொண்­டி­ருந்­தார். மக்­கள் செயல் கட்­சி­யின் நான்­காம் தலை­மு­றைத் தலை­வர்­கள் குழுவை வழி­ந­டத்­து­ப­வ­ரா­கத் தேர்­வு­செய்­யப்­பட்­ட­பின் அவர் மேற்­கொண்டு முதல் வெளி­நாட்­டுப் பய­ணம் இது­தான்.

அமெ­ரிக்­கப் பய­ணத்­தின்­போது, உலக வங்கி-அனைத்­து­லகப் பண நிதி­யக் கூட்­டங்­க­ளி­லும் ஜி20 நாடு­க­ளின் நிதி­ய­மைச்­சர்­கள், மைய வங்கி ஆளு­நர்­கள் கூட்­டத்­தி­லும் திரு வோங் பங்­கேற்­றார்.

உலக வங்­கிக் குழு­மத்­தின் தலை­வர் டேவிட் மல்­பாஸ் மற்­றும் அவ­ரது மூத்த நிர்­வா­கக் குழு, அனைத்­து­லக நிதி ஒத்­து­ழைப்பு அமைப்­பின் நிர்­வாக இயக்­கு­நர் மக்­தர் டியோப், பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு, வளர்ச்சி நிறு­வ­னத்­தின் தலை­மைச் செய­லா­ளர் மத்­தா­யஸ் கோர்­மன், உலக வங்­கிக் குழு­மத்­தின் நிர்­வாக இயக்­கு­ந­ரும் தலைமை நிதி அதி­கா­ரி­யு­மான அன்­ஷுலா கன்ட் ஆகி­யோரை அமைச்­சர் வோங் சந்­தித்­தார்.

அத்­து­டன், இந்­தோ­னீ­சிய நிதி­ அ­மைச்­சர் ஸ்ரீ முல்­யாணி இந்­தி­ரா­வதி, மலே­சிய நிதி­ய­மைச்­சர் ஸஃப்ருல் அஸிஸ், இந்­திய நிதி­ அ­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன், ஜப்­பா­னிய நிதி­ய­மைச்­சர் ஷுனிச்சி சுசுகி, பிலிப்­பீன்ஸ் நிதி­ய­மைச்­சர் கார்­லோஸ் டொமிங்­கெஸ் உட்­பட ஆசிய பசி­பிக் நாடு­க­ளின் நிதி­ அமைச்­சர்­க­ளை­யும் திரு வோங் சந்­தித்­துப் பேசி­னார்.

ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தில் அமெ­ரிக்­கா­வின் ஈடு­பாடு குறித்­தும் பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு குறித்­தும் அமெ­ரிக்க உய­ர­தி­காரி­களு­டன் அவர் கலந்­தாலோசனை செய்தார்.

அனைத்­து­லக அள­வில் கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக மாற்­று­தல் மற்­றும் பயங்­க­ர­வா­தத்­திற்கு நிதி­யா­த­ரவு வழங்­கு­வ­தைக் கண்­கா­ணிக்­கும் நிதிச் செயல் பணிக்­கு­ழு­வின் அமைச்­சர்­நி­லைக் கூட்­டத்­தி­லும் அவர் பங்­கேற்­றார்.

ஐநா­விற்­கான சிங்­கப்­பூ­ரின் நிரந்­த­ரத் தூத­ர­கம் நியூ­யார்க்­கில் ஏற்­பாடு செய்­தி­ருந்த ஒன்­று­கூ­ட­லில் கலந்­து­கொண்டு, அங்கு வசிக்­கும் சிங்­கப்­பூ­ரர்­க­ளை­யும் அமைச்­சர் வோங் சந்­தித்­தார்.

"பல்­வேறு பொறுப்­பு­களை வகித்­த­படி, வெளி­நா­டு­களில் சிங்­கப்­பூ­ரர்­கள் தம் நாட்­டுக் கொடியை உய­ரப் பறக்க விடு­வ­தைக் கண்டு மகிழ்ந்­தேன். சிங்­கப்­பூர் உணர்வை வலு­வாக வைத்­தி­ருப்­போம்!" என்­றும் திரு வோங் பதி­விட்­டுள்­ளார்.