தேரோட்டத்தில் விபத்து: மின்சாரம் தாக்கி 11 பேர் பலி

தேரோட்டத்தில் விபத்து: மின்சாரம் தாக்கி 11 பேர் பலி

2 mins read
96cbe543-4004-4616-bfba-e9bcd9b7f78d
மின்சாரத் தீயில் கருகி சீர்குலைந்த தேர். சுமார் 50 பேர் சற்று தள்ளி இருந்த தால் அதிக உயிரிழப்பு தவிர்க்கப்பட்ட தாக காவல் துறையினர் கூறினர். விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு அதிபரும் பிரதமரும் இரங்கல் தெரிவித்தனர். படம்: தமிழக ஊடகம் -

தமி­ழ­கத்­தின் தஞ்­சா­வூர் அருகே நேற்று அதி­காலை தேர் மீது மின்­சா­ரம் பாய்ந்­த­தில் இரு சிறு­வர்­கள் உள்­ளிட்ட 11 பேர் மாண்­ட­னர். 15 பேர் காயமடைந்தனர்.

தஞ்­சா­வூ­ரி­லி­ருந்து 8 கிலோ­

மீட்­டர் தொலை­வில் உள்ள களி­மேடு கிரா­மத்­தில் அப்­பர் மடத்­துக்­கான கோயில் உள்­ளது. ஆண்­டு­தோ­றும் அப்­பர் பிறந்த நட்­சத்­தி­ர­மான சதய நட்­சத்­திர தினத்­தில் இங்கே சித்­தி­ரைத் திரு­விழா நடை­பெ­று­வது வழக்­கம்.

94வது ஆண்­டாக நடை­பெற்ற திரு­வி­ழா­வின் முக்­கிய நிகழ்­வாக தேரோட்­டம் நடை­பெ­றும். வழக்­கப்­படி நேற்று முன்­தி­னம் இரவு ேதரோட்­டம் தொடங்கி, களி­மேடு கிரா­மத்­தின் பல்­வேறு வீதி­கள் வழி­யாக நடை­பெற்­றுக்கொண்­டி­ருந்­தது. தேரை பொது­மக்­கள் வடம் பிடித்து இழுத்­துச் சென்­ற­னர்.

நேற்று அதிகாலை 3.15 மணி யளவில் கீழத்தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்த தேர், ஒரு திருப்பத்தில் திரும்பியபோது மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்காரத் தட்டி உரசியது.

இதனால் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும் சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்­த­தில் 15 வய­துக்­குட்­பட்ட மூன்று சிறு­வர்­கள் உட்­பட 10 பேர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­னர். மேலும் 15 பேர் படு­கா­யம் அடைந்­த­னர். மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­வர்­களில் மேலும் ஒருவர் உயி­ரி­ழந்­த­தால் பலி எண்­ணிக்கை 11 ஆக உயர்ந்­தது.

கிட்­டத்­தட்ட 50 பேர் தேரி­லி­ருந்து சற்று தள்ளி நின்­றி­ருந்­த­தால் அதி­க­மான உயி­ரி­ழப்­பு­கள் தவிர்க்­கப்­பட்­ட­தாக காவல்­து­றை­யி­னர் கூறி­னர்.

சில மாதங்­க­ளுக்கு முன்­னர் அப்­ப­கு­தி­யில் போடப்­பட்ட தார் சாலை, விபத்­துக்கு முக்­கிய கார­ணம் என்று கிராம மக்­கள் கூறி­னர். பழைய சாலையை பெயர்க்­கா­மல் ஒன்­றைரை அடி உய­ரத்­திற்கு சாலை போடப்­பட்­ட­தால் பக்­க­வாட்­டில் பள்­ளங்­கள் ஏற்­பட்­ட­தா­க­வும் திருப்­பத்­தில் தேர் நிலை­த­டு­மாறி மின்­கம்­பி­யில் உரச அந்­தப் பள்­ளங்­கள் கார­ண­மாக இருந்­த­தா­க­வும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

இருப்­பி­னும் நடந்­தது என்ன என்­பதை அறிய விசா­ர­ணைக் குழு அமைக்­கப்­பட்டு உள்­ளது.

சம்­ப­வத்தை அறிந்த இந்­திய அதி­பர் ராம்­நாத் கோவிந்­தும் பிர­த­மர் மோடி­யும் இரங்­கல் தெரி­வித்­த­னர்.

இதற்­கி­டையே, மாண்­டோ­ருக்கு நேற்று தமி­ழக சட்­ட­மன்­றத்­தில் இரங்­கல் தெரி­விக்­கப்­பட்­ட­து­டன் இரண்டு நிமி­டம் மவுன அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது. இறந்த ஒவ்­வொ­ரு­வ­ரின் குடும்­பத்­திற்­கும் 5 லட்­சம் ரூபாய் நிவா­ர­ணத் தொகை வழங்­கப்­படும் என முதல்­வர் மு.க. ஸ்டா­லின் அறி­வித்­தார். பின்னர் அவர் தேர் விபத்து நிகழ்ந்த களிமேடு கிராமத்திற்குச் சென்றார். உயிரிழந் தோரின் உடலுக்கு மரியாதை செலுத்திய அவர், மாண்டோரின் குடும்பத்தாருக்கு நிவாரண உதவி அளித்து ஆறுதல் கூறினார்.