சிங்கப்பூரில் நிதி தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் மிக விரைவாகத் தண்டிக்கப்படுவர் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.
நிதித் தொழில் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறியது தொடர்பான புலன் விசாரணை
களையும் மறுஆய்வுகளையும் நடத்தி முடிக்க குறைவான காலம் எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஆணையம் நேற்று வெளியிட்ட 'அமலாக்க அறிக்கை 2020-2021' தெரிவிக்கிறது.
குற்ற வழக்குகள் தொடர்பான விசாரணை 24 மாதங்களிலிருந்து ஒன்பது மாதங்களாகவும் குடிமை தண்டனை வழக்குகளில் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் மறுஆய்வுக்கான காலம் 26 மாதங்களில் இருந்து 19 மாதங்களாகவும் குறைந்ததாக அது கூறியது.
இவ்வாறு விரைந்து விசாரணை நடத்தப்பட்டதன் விளைவாக ஏழு குற்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டது.
அவற்றுள் மூன்று வழக்குகளில் சிறைத் தண்டனையும் நான்கு வழக்குகளில் அபராதமும் விதிக்கப்பட்டன.
2020 ஜூலை முதல் 2021 டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த வழக்கு
களுக்காக 18 மாதங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இவை தவிர, 20 கட்டுப்பாட்டு ஆணைகளும் இந்தக் காலகட்டத்தில் பிறப்பிக்கப்பட்டதாக அறிக்கை குறிப்பிட்டது. தகுதியற்றவர்கள் தடைசெய்யப்பட்டு மீண்டும் அவர்கள் நிதித்துறைக்குள் நுழையாதபடி அந்த ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.
மேலும், பயங்கரவாத நிதி அளிப்புத் தடையை மீறுதல் மற்றும் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுதல் போன்ற குற்றங்களுக்கு $2.4 மில்லியனும் குடிமை வழக்குகளில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு $150,000 தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.
அமலாக்க ஆற்றல், நேரத்தின் அடிப்படையில் மட்டும் கணிக்கப்படுவதில்லை என்றும் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் விசாரணை காலம் மாறுபடுவதாகவும் ஆணையத்தின் அமலாக்கத் துறை நிர்வாக இயக்குநர் திருவாட்டி பெக்கி பாவோ-கீர்த்தி ெபய் யு கூறினார்.
நிதி முறைகேடுகள் மீது கவனம் செலுத்தப்படுவது தொடர்பான ஆற்றலை மேம்படுத்தும் வகையில் சட்ட மாற்றங்களுக்கு ஆணையம் உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிச் சேவைகள் மற்றும் சந்தைகள் மசோதா 2022 ஆணையத்தின் அதிகாரங்களை மேம்
படுத்தியது. அதனை ஆணையம் அறிமுகம் செய்து வருகிறது.
சந்தை முறைகேடுகளால் பாதிக்கப்படும் முதலீட்டாளர்
களுக்கான உதவியை மேம்படுத்து வது குறித்தும் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.
நிதி நிறுவனங்கள் அல்லது கீழ்நிலை அதிகாரிகள் விதிமீறல்களில் ஈடுபட்டால் மூத்த அதி காரிகளைப் பொறுப்பேற்கச் செய் வதிலும் ஆணையம் கூடுதல் கவனம் செலுத்தும்.
மேலும், ஆணையத்தின் நிர்வாகச் சட்டங்களுக்கு உட்பட்ட விசாரணை அதிகாரங்களை வலுப்படுத்துவது தொடர்பான யோசனைகளிலும் அது ஈடுபட்டு வருகிறது.
சிங்கப்பூர் நாணய ஆணையம் தகவல்

