'வேலைச் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்க'

'வேலைச் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்க'

3 mins read

நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் அதிபர் ஹலிமா வேண்டுகோள்

வேலைச்­சூ­ழ­லின் அடிப்­ப­டையை கொவிட்-19 பெருந்­தொற்று மாற்றி­விட்ட நிலை­யில், அதற்­கேற்ப முத­லா­ளி­களும் ஊழி­யர்­களும் தங்­களை மாற்­றிக்­கொள்ள வேண்­டும் என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் தமது மே தினச் செய்­தி­யில் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

முத­லா­வ­தாக, வீட்­டி­லும் பணி­யி­டத்­தி­லு­மாக வேலை­செய்­யும் கலப்­பு­ நடைமுறை இங்கு தொட­ரும். பணியி­டத்­தை­விட்­டுத் தொலை­வில் இருந்­த­படி வேலை செய்ய முடி­யும் என்­பதை இந்­தப் பெருந்­தொற்று காட்­டி­யுள்­ள­தோடு, கண­வ­னும் மனை­வி­யும் வேலை செய்­யும் குடும்­பங்­களில் நீக்­குப்­போக்­கான பரா­ம­ரிப்பு ஏற்­பா­டு­களைச் செய்­து­கொள்­ள­வும் அது உத­வு­கிறது என்று ஃபேஸ்புக்­கில் வெளி­யிட்­டுள்ள காணொளி வழி­யாக அதி­பர் ஹலிமா தெரி­வித்­து உள்­ளார்.

இரண்­டா­வ­தாக, மக்­க­ளின் உற­வு­மு­றை­யி­லும் மாற்­றம் ஏற்­பட்­டுள்­ள­தாக அதி­பர் குறிப்­பிட்­டுள்­ளார். மக்­க­ளின் வாழ்­வில் வேலை என்­பது ஒருங்­கி­ணைந்த பகு­தி­யா­கத் தொட­ரும் நிலை­யில், இனி­யும் பலர் வேலைக்­காக மட்­டும் தங்­க­ளின் வாழ்க்கையை அர்ப்­பணிக்­கத் தயா­ராக இல்லை என்று அவர் கூறி­யுள்­ளார்.

இத­னால், தங்­கள் பணி­யா­ளர்­களை நிர்­வ­கிப்­ப­தி­லும் நிறை­வு அ­ளிக்­கும் வகை­யி­லான வேலை­யி­டங்­களை உரு­வாக்­க­வும் நிறு­வனங்­கள் ஆக்­கப்­பூர்­வ­மா­கச் செயல்­பட வேண்­டி­யி­ருக்­கும் என்று திரு­வாட்டி ஹலிமா தெரி­வித்து இருக்­கி­றார்.

மூன்­றா­வ­தாக, போதிய அள­வில் மற்ற தெரி­வு­கள் இல்­லா­த­தா­லும் நீக்­குப்­போக்­கான வேலை முறை­யா­லும் தன்­னு­ரி­மைத் தொழில் செய்­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

ஆயி­னும், பெரும்­பா­லும் அத்­த­கைய வேலை­க­ளால் ஓய்­வுக்­கால, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் தேவை­களுக்­குப் போது­மான பணத்­தைச் சேமிக்க முடி­வ­தில்லை என்ற அதி­பர், அத்­த­கைய ஊழி­யர்­க­ளைச் சிறந்த முறை­யில் பாது­காப்­பது எப்­படி என்ற பிரச்­சி­னையை இப்­போது பல நாடு­களும் எதிர்­கொண்டு வரு­வ­தா­க­வும் சொன்­னார்.

தன்­னு­ரிமை ஊழி­யர்­க­ளைப் பாது­காக்க சில நாடு­கள் சட்­டங்­கள் இயற்­றி­யி­ருப்­பதை அவர் சுட்­டி­னார்.

"சிங்­கப்­பூ­ரில் இப்­போ­தைக்கு நமது சமூ­கப் பாது­காப்­பா­னது பெரும்­பா­லும் முழு­நேர வேலை­வாய்ப்பை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டுள்­ளது என்­ப­தால் இந்­தப் பிரச்­சி­னை­யைக் கையாள்­வது முக்­கி­யம். அதே நேரத்­தில், இன்­றைய வேலைச் சந்­தை­யா­னது பல­வ­கைப்­பட்­ட­தா­க­வும் ஒழுங்­கு­படுத்­தப்­ப­டா­த­தா­க­வும் உள்­ளது," என்று அதி­பர் ஹலிமா கூறி­னார்.

இத­னி­டையே, எல்­லை­கள் மீண்டும் திறக்­கப்­பட்­டி­ருப்­ப­தால் தொழில் நிலைமை மேம்­ப­ட­லாம் என்­றா­லும், உல­க­ம­ய­மாக்­க­லுக்கு எதி­ரான போக்­கா­லும் மாறி­வ­ரும் புவி­சார் அர­சி­யல் நில­வ­ரத்­தா­லும் சிங்­கப்­பூர் உலக அள­வி­லான சவால்­களை எதிர்­நோக்கி இருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 பர­வ­லால் ஏற்­பட்ட விநி­யோ­கத் தொடர் இடை­யூ­று­களும் உக்­ரேன் போரும் உள்­நாட்­டி­லேயே பொருள்­களை உற்­பத்தி செய்­யும் நிலைக்கு நாடு­க­ளைத் தள்­ளி­யி­ருக்­கிறது என்­றும் அமெ­ரிக்கா-சீனா இடையே மோச­ம் அடைந்து வரும் உறவு, தொழில்­நுட்­பத்­தை­யும் விநி­யோ­கத் தொட­ரை­யும் பிரித்­து­விட்­டது என்­றும் திரு­வாட்டி ஹலிமா தெரி­வித்­தார்.

எரி­பொ­ருள், பண்­டங்­கள் விலை அதி­க­ரிப்­பால் பண­வீக்­க­மும் உயர்ந்­தி­ருப்­பது பொரு­ளியல்­களை­யும் சமூ­கப் பிணைப்­பை­யும் அச்­சு­றுத்தி வரு­வ­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளர்.

"வரும் ஆண்­டு­களில் உலக அரங்­கில் தனது இடத்தையும் இணக்கமான போக்கையும் உறுதி­செய்ய, இந்­தச் சவால்­களை எல்­லாம் சிங்­கப்­பூர் எவ்­வாறு சமா­ளிக்­கிறது என்­பது முக்­கி­யம்," என்­றார் அதி­பர்.

அவ்­வ­கை­யில், தேர்ச்­சி­மிக்க, கண்­ணி­ய­மான, பொருத்­த­மாக மாற்­றி­ய­மைத்­துக் கொள்­ளக்­கூ­டிய ஊழி­ய­ர­ணி­யை­யும் நல்ல உள்­கட்­ட­மைப்­பை­யும் தொழில்­செய்ய உகந்த சூழ­லை­யும் கொண்­டி­ருப்­பது சிங்­கப்­பூ­ருக்­குச் சாத­க­மான அம்­சங்­கள் என்று அவர் சொன்­னார்.

தொழில்­நுட்­பம், புத்­தாக்­கம், மின்­னி­லக்­க­ம­யம் ஆகி­ய­வற்­றைப் பயன்­ப­டுத்தி, நீடித்து நிலைக்­கத்­தக்க வளர்ச்­சியை எட்­ட­வும் சிங்­கப்­பூர் பணி­யாற்றி வரு­வ­தாக திரு­வாட்டி ஹலிமா குறிப்­பிட்­டார்.

"இறு­தி­யாக, பொரு­ளி­யல் நிலைத்­தன்­மை­க்கும் தொழில்­நிறு­வனங்­களின் வளர்ச்சிக்கும் மக்­க­ளுக்கு நல்ல வேலை­களை உரு­வாக்­குவதற்குமான நல்ல தொழில் மேலாண்மை உற­வு­க­ளைச் சிங்­கப்­பூர் கொண்­டுள்­ள­து," என்று அதிபர் தெரிவித்து இருக்கிறார்.