வெயில் 50 டிகிரியைத் தாண்டும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

வெயில் 50 டிகிரியைத் தாண்டும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

2 mins read
a550f445-d44b-4f7a-b783-87af40fe0243
கொளுத்தும் வெயிலிலும் அலகாபாத் சங்கம் கரைப்பகுதியில் கொடி ஏந்தி ஆன்மிகப் பயணம் செல்லும் பக்தர் கூட்டம். படம்: ஏஎஃப்பி -

வட­இந்­தி­யா­வில் வரும் நாள்­களில் வெப்­ப­நிலை 50 டிகிரி செல்­சி­ய­சைத் தாண்­ட­லாம் என்று இந்­திய வானிலை மையம் கணித்­துள்­ளது.

"கடந்த மாதம் சரா­சரி அதி­க­பட்ச வெப்­ப­நி­லை­யாக வட­மேற்கு, மத்­திய இந்­தி­யா­வில் முறையே 35.90 டிகிரி செல்­சி­ய­சும் 37.78 டிகிரி செல்­சி­ய­சும் பதி­வா­கி­யுள்­ளது. கடந்த 122 ஆண்­டு­களில் இதுவே ஆக அதி­கம்," என்று வானிலை ஆய்­வி­யல் தலைமை இயக்­கு­நர் டாக்­டர் எம்.மொக­பத்ரா கூறி­னார்.

வழக்­க­மாக, மே மாதம்­தான் ஆக வெப்­ப­மான மாத­மாக இருக்­கும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, பல மாநி­லங்­களி­லும் நேற்று முன்­தி­னம் வெப்­ப­நிலை 46 டிகிரி செல்­சி­ய­சுக்­கு­மேல் பதி­வா­னது. ஆக அதி­க­மாக, உத்­தர பிர­தேச மாநி­லத்­தின் பாந்­தா­வில் 47.4 டிகிரி செல்­சி­யஸ் வெப்­ப­நிலை பதி­வா­னது.

உத்­த­ரப் பிர­தே­சத்­தின் பிர­யாக்­ராஜ் (46.4), ஜான்சி (46.2), ராஜஸ்­தா­னின் கங்­கா­ந­கர் (46.4), மத்­தி­யப் பிர­தே­சத்­தின் நவ்­காங் (46.2), மகா­ராஷ்­டி­ரா­வின் சந்­தி­ர­பூர் (46.4) ஆகிய இடங்­க­ளி­ல் வெப்­ப­நிலை 46 டிகிரி செல்­சி­ய­சைத் தாண்­டி­யது. குரு­கி­ரா­மில் இது­வரை இல்­லாத அள­வில் 45.9 டிகிரி வெப்­ப­நிலை பதி­வா­னது.

டெல்லி சஃப்தர்­ஜங் வானி­யல் ஆய்­வ­கத்­தில் தொடர்ந்து இரண்­டா­வது நாளாக 43.5 டிகிரி செல்­சி­யஸ் வெப்­ப­நிலை பதி­வா­னது. கடந்த 12 ஆண்­டு­களில் ஏப்­ரல் மாதத்­தின் ஒரு­நா­ளில் பதி­வான ஆக அதி­க­பட்ச வெப்­ப­நிலை இது­தான்.

இப்­ப­டிக் கடு­மை­யான அனல் வீசும் நிலை­யில், நாட்­டின் மின்­சாரத் தேவை­யா­னது முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வா­கக் கடந்த வியா­ழ­னன்று 204.65 கிகா­வாட்­டாக உயர்ந்­தது.

தமிழ்­நாட்­டி­லும் வெயில் தாண்­ட­வம்

இதற்­கி­டையே, தமிழ்­நாட்­டி­லும் வெயில் உக்­கி­ரம் காட்டி வரு­கிறது. அதி­க­பட்­ச­மாக வேலூ­ரி­லும் கரூர் பர­மத்­தி­யி­லும் நேற்று முன்­தி­னம் 106 டிகிரி ஃபாரன்­ஹைட் (41.1 டிகிரி செல்­சி­யஸ்) வெப்­ப­நிலை பதி­வா­னது. திருத்­தணி, ஈரோடு, தரு­ம­புரி, மதுரை, பாளை­யங்­கோட்டை ஆகிய இடங்­க­ளி­லும் வெப்­ப­நிலை 100 டிகிரி ஃபாரன்­ஹைட்­டைத் தாண்­டி­யது.