சிங்கப்பூர்-மலேசியா இடையே 240 டாக்சிகளை இயக்க அனுமதி

சிங்கப்பூர்-மலேசியா இடையே 240 டாக்சிகளை இயக்க அனுமதி

1 mins read

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­விற்­கும் இடையே இன்று முதல் கிட்­டத்­தட்ட 240 டாக்­சி­களை இயக்க அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த மாதம் 22ஆம் தேதி­வரை எல்லை தாண்டி டாக்சி ஓட்ட 156 மலே­சிய டாக்சி ஓட்­டு­நர்­களுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டு உள்­ள­தாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­தது. அதே­போல, தமது சங்­கத்­தைச் சேர்ந்த 80 சிங்­கப்­பூர் டாக்சி ஓட்­டு­நர்­களுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டு இருப்பதாக சிங்­கப்­பூர்-ஜோகூர் டாக்சி சேவை வழங்­கு­நர் சங்­கத் தலை­வர் டெங் கோக் டை, 71, கூறி­னார்.

இத்­த­கைய டாக்­சி­களில் செல்ல விரும்­பும் சிங்­கப்­பூர் பய­ணி­கள் பான் சான் ஸ்தி­ரீட் முனை­யத்­தில் ஏற­லாம் அல்­லது கம்­ஃபர்ட்­டெல்­குரோ, டிரான்ஸ்­கேப், ஸ்ட்­ரைட்ஸ் டாக்சி அல்­லது பிரைம் டாக்சி நேர­டித் தொலை­பேசி எண் வழி­யா­கத் தொடர்­பு­கொள்­ள­லாம் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

உரி­மம் பெற்ற, எல்லை தாண்டி இயங்­க­வல்ல சிங்­கப்­பூர் டாக்­சி­கள் மட்­டுமே மலே­சியா செல்­ல­லாம். அவை ஜோகூர் பாரு­வில் உள்ள லர்­கின் டாக்சி முனை­யத்­திற்கு மட்­டுமே செல்ல முடி­யும். அங்கு இருந்து அவை பய­ணி­களை ஏற்­றிக்­கொண்டு சிங்­கப்­பூர் வர­லாம். அதே­போல், சிங்கப்பூருக்கு வர மலேசிய டாக்சிகளும் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவை பான் சான் ஸ்திரீட் முனையத்திற்கு மட்டுமே செல்லலாம்.

கொவிட்-19 பர­வ­லுக்­கு­முன், இத்­த­கைய எல்லை தாண்டி இயங்­கும் டாக்­சி­கள் நிலை­யான கட்­ட­ண­மாக $48 வசூ­லித்­தன. இனி­யும் அதே கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­படும் என்ற திரு டெங், அதனை $60 ஆக உயர்த்­தக் கோரி விண்­ணப்­பித்­துள்­ள­தா­க­வும் கூறினார்.